| | குறையினை நாட்டுவ தாகக் கொழுங்கயற் கண்ணியின்ப | | | நிறையினை நாட்ட நெடுஞ்சுரம் போக்கு நினைந்தனரே. |
(இ - ள்.) கொழுத்த கயல் மீன் போன்ற கண்ணினை யுடையோய் யாம், களவொழுக்கத்தினை நிலைநிறுத்தியும் அதன்கண் வரும் இடுக்கண்களை யகற்றியும் வரைந்து கொள்ளு முறைமையினை வற்புறுத்தினா மன்றோ, நின்முலைக்கு விலையாகப் பொருளீயக் கருதுமிடத்தே முழுதான இவ்வுலகமே குறையுடையதாக விருத்தலால் இனித் தம் கடமையான கற்பொழுக்கத்தே நின்னை வைத்து காமப் பேரின்பத்தின் முழுமையை நிலைநாட்டக் கருதி நெடிய பாலைக்கண் உடன்போக்கினைக் குறிக்கொண்டனர் நந்தலைவர். (வி - ம்.) மறை - களவொழுக்கம். மன்றல் - வரைவு. (572) கற்பு மிக்கவள் வெற்பனொடு துணிதல் (தலைவி தோழிக்குக் கூறியது) | | பட்டாங் குரைத்தும் பணிமொழி யாய்படர் வெஞ்சிலைக்கைத் | | | தொட்டாங் கடுத்தவன் றேயெமைக் காத்தவத் தோன்றல்வழி | | | விட்டாங் கருத்தினை மேதகு நாணும் விளியினுமென் | | | நட்டாங் கிருப்பினு மென்னவற் றாவன நாடிலமே. |
(இ - ள்.) தோழி கேள்! இனி எமது சிந்தனையை உள்ளபடியே உரைப்பேம். வெவ்விய வில்லை ஏந்தி அந்நம்பி எம்பால் வந்தெய்திய அற்றை நாளே எம்மைப் பாதுகாத்தருளிய அவன்பால் எம் நெஞ்சத்தை முழுதும் விட்டுவிட்டேம், ஆகலின் மேன்மைக்குக் காரணமான தகுதியையுடைய நமது நாணம் இறந்துபடினும் நட்புக்கொண்டவாறே இருப்பினும் என்னாம்? அவ்விரு நிலையானும் வருபவற்றை யாம் ஆராய்கின்றிலேம். (வி - ம்.) பட்டாங்கு - உண்மை. படர் - சிந்தனை. தோன்றல் - தலைவன். நட்டாங்கு - நட்புக் கொண்டபடியே. (573) கோற்றொடி துணிவின் வீற்றினைக் கிளத்தல் (தோழி தலைவனுக்குக் கூறியது) | | தடையா கியமலம் வீராட்ட காசன் றவிர்ப்பவுயிர் | | | விடையா வருண்முந் துறுவது போன்மின் னரிசிதறிப் | | | படையாள் விழியின ளெம்மவர் காவலைப் பாற்றுதலும் | | | உடையாய் நினக்குமுன் செல்லநின் றாளுடல் வெஞ்சுரமே. |
(இ - ள்.) திருவீராட்டகாசத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவன் மெய்யுணர்தற்குத் தடையாயுள்ள ஆணவமலத்தின் வலிமையை அகற்றிய அளவிலே உயிர் ஊக்கங்கொண்டு திருவருளின்பாற்பட்டு அதன் முன்னர்ச் செல்லுமாறு போன்று ஒளிர்கின்ற செவ்வரி படர்ந்து வேற்படையை ஒத்த விழியினையுடைய நந்தலைவிகுன்றவாணர் தமது காவலைச் சிறிது அகற்றிய துணையானே எம்மையாளுடைய ஐயனே! |