| துன்புறுத்து மியல்புடைய வெவ்விய பாலையின்கண் நினக்கு முன்னே போதற்குச் சமைந்திருந்தாள் காண். (வி - ம்.) தடை - மெய்யுணர்த்தற்குத் தடை என்க. விடையா - விடைத்து ; ஊக்கங்கொண்டு. அரி - செவ்வரி. ஆள் : உவமப்பொருட்டு. (574) புல்குறிப் பொழுதே செல்குறிப் பொழுதெனல் | | கச்சிப் பதிகயி லாயந் திருத்தில்லை காழிமறை | | | உச்சிப் பதியுங்கொள் வீராட்ட காசத் தொருமுதலை | | | நச்சிப் பரவு நகுபூண் மருமத்து நண்பநறு | | | நொச்சிப் புதுமலர் வீங்கிருள் வீழ்வன நோக்குதுமே. |
(இ - ள்.) திருக்காஞ்சிநகரம் திருக்கயிலாயமலை திருத்தில்லை திருக்காழி, மறையின் உச்சியாகிய இடம் என்னும் இவற்றுள் எழுந்தருளி யிருக்கும் வீராட்டகாசத்துத் தனிப்பெருங் கடவுளை விரும்பி வழிபடா நின்ற விளங்கும் அணிகலன் அணிந்த திருமார்பினையுடைய நண்பனே! பெருகிய இருளையுடைய நள்ளிரவின்கண் மனைப்படப்பையின் கண்ணுள்ள நொச்சியினது புதுமலர் வீழ்வனவற்றைக் காண்டற்கு யாங்கள் வருவேம். (வி - ம்.) காழி - சீகாழி. நச்சி - விரும்பி. மருமம் - மார்பு. நள்ளிரவு உடன்போக்குத் தகுந்தபொழுது என்பது குறிப்பு. (575) தேம்பிடைத் தலைவியை யோம்படுத் துரைத்தல் இதுவுமது | | இருள்குடி கொண்டமெல் லோதியர் சீறினு மீன்றவளை | | | மருள்குடி கொண்டவக் காலம் விடாது மரீஇயழுவார் | | | தெருள்குடி கொண்டவிக் காலமெல் லாஞ்செல்வ சீறினுமெய் | | | அருள்குடி கொண்டதம் மன்பரை யன்றி யறிகலரே. |
(இ - ள்.) செல்வனே! இருண்ட மெல்லிய கூந்தலையுடைய மகளிர் தம் பேதைப் பருவமாகிய அறியாமை மிக்க அக்காலத்திலே தாய் வெகுண்ட விடத்தும் அவளை விடாமல் அவள்பாற்றஞ்சம் புகுந்து அழா நிற்பர். இனி அறிவு நிரம்பப் பெற்ற பெதும்பைப் பருவமாகிய இக்கால மெல்லாம் அம் மகளிர் தம் கணவன் வெகுண்டவிடத்தும் மெய்யன்பு நிரம்பிய அவரையன்றித் தமக்குப் புகலாவார் பிறரை அறியமாட்டாத வியல்பினர்காண். (வி - ம்.) ஓதி - கூந்தல். மருள்குடி கொண்டவக்காலம் என்றது பேதைப் பருவத்தை. தெருள்குடி கொண்டவிக்காலம் என்றது காமஞ் சான்ற பெதும்பைப் பருவத்தை. (576) |