| போதரத் துணிந்தோன் மாதர் மெல்லியலும் வெள்ளிடைச் சுரமும் உள்ளினன் கவறல் (தலைவன் நெஞ்சிற்குக் கூறியது) | | புரியுடைந் தாலென வாளர வங்கள் புரண்டுசெல்லும் | | | கரியுடைந் தோடிக் கயத்திடைச் சேற்றினுட் காலழுத்தும் | | | எரியுடைந் தார்க்கு மியவையிம் மாதொடு மேகுவதோ | | | பரியுடைந் தாவது மில்லையன் னோவென்ன பாதகமே. |
(இ - ள்.) வைக்கோற்புரி உடைந்தாற்போன்று வாள்போலும் கொடிய பாம்புகள் வெப்பந் தாங்கமாட்டாமல் புரண்டு புரண்டு இயங்காநிற்கும், யானைகள் கெட்டோடி வெப்பமாற்றாமல் நீரற்றவறுங் குளத்தேயுள்ள சேற்றினுட் தம் கால்களைப் புதையா நிற்கும், காட்டுத்தீ யாண்டுஞ் சிதறி ஆரவாரியா நிற்கும் இத்தகைய கொடிய நெறியின்மிசை இம்மெல்லிய நங்கையுடன் செல்லத் துணிவதோ? இப்பரிவினால் மனமுடைந்தேமாயினும் வேறு வழியுமில்லை அந்தோ! இஃதொரு பாவமிருந்தவாறு. (வி - ம்.) புரி - வைக்கோற்புரி. எரி - நெருப்பு. இயவை - வழி. இம்மாதொடு என்புழிச்சுட்டு அவள் மென்மையைச் சுட்டியது. (577) குறிவயிற் கூட்டி நெறிவயிற் செலுத்தல் (தோழி கூற்று) | | ஒருமா தடிந்துய ருந்தணி காசலத் தும்பனென | | | வருமா தடிந்தவள் ளானனி வாழிய வானவர்தம் | | | பெருமான் மகளென வெம்முயிர் மாதினைப் பேணியிந்தக் | | | கருமா லிருள்கழி யாமுன்ன ரிவ்வரை கையகன்றே. |
(இ - ள்.) ஒப்பற்ற சூரபதுமனாகிய மாமரத்தினை அழித்து வெற்றியா லுயர்ந்த திருத்தணிகையின்கட் பெருமான் போன்று எம்மெதிரே சினந்து வந்த யானையை அழித்து உயிர்தந்த வள்ளலே நீ வாழ்க! எமக்கு உயிர்போலச் சிறந்த இத்தலைவியை இந்திரன் மகள்போன்று பாதுகாத்து இந்தக் கரிய பேரிருள் கழிதற்கு முன்னரே இம் மலையினின்றும் அகன்று சென்றருள்க. (வி - ம்.) வானவர் பெருமான் மகளென என்றது சிறப்புடையளாகக் கருதி என்றவாறு. வள்ளால் : விளி. (578) நீங்குறு தலைவிக்குப் பாங்கி கிளத்தல் (பாங்கி - தோழி) | | ஒற்றைப் பொலஞ்சகட் டூர்திவெய் யோனுதிக் கும்பொழுதே | | | கற்றைப் புரிகுழ லாய்கௌவை யாக்குநர் வாயடையா | | | இற்றைப் பொழுதிங் கிருந்திமை யாரிறைஞ் சுந்தணிகை | | | மற்றைப் பொழுதுநிற் காணுவன் சென்றுமுன் வாழியவே. |
|