| இயவை யினைத்தென் றயர்வு நீக்கல் (தலைவன் கூற்று) | | வல்லத் தொருபுடை வைகுநும் மோங்கன் மறைந்ததினிச் | | | செல்லத் தொடங்கிற் செறிபிணி யாளருஞ் சென்றுவல்லே | | | புல்லத் தொடர்ச்சி புணர்தணி காசலம் பூவையன்னாய் | | | மெல்லத் தொடரினும் வேலைசெய் யோன்பட மேவுதுமே. |
(இ - ள்.) பூவை போல்வாய்! திருவல்லம் என்னும் எம்பிரானுடைய திருப்பதியின் அணித்தாக ஒருசார் உள்ள நுங்கள் மலைகாட்சியினின்றும் மறைவதாயிற்று. இனிச் செறிந்த நோயான் மெலிந்தோரும் விரைந்து சென்று சேருமாறு அணித்தாகிய தொடர்புபட்ட திருத்தணிகை மலைக்கு யாம் செல்லத் தொடங்குவேமாயின் மெல்ல மெல்ல நடப்பினும் ஞாயிறு மேலைக்கடலில் மறையுமளவில் அம் மலையை அடைவேம். (வி - ம்.) வல்லம் - தொண்டை நாட்டில் ஒருசிவதலம். (582) திகழ்வரை காட்டி மகிழ்சிறப் பித்தல் இதுவுமது | | இக்குன்று காண்கடி காசல மீங்கெதி ரேவிளங்கும் | | | அக்குன்று காண்டணி காசல மிந்த வணிநதியம் | | | மைக்குன்றின் பாங்கர்ப் படர்வது காணொப்பின் மாட்சிகுன்றி | | | எக்குன்றுங் குன்றெனும் பேர்பெற வோங்கு மிளமுலையே. |
(இ - ள்.) தமக்கு உவமை யாகாமையான் எத்தகைய மலையும் மாட்சிமை குன்றிப் போதலின் குன்றுகள் என்று பெயர் பெறுதற்குக் காரணமான பரிய முலைகளையுடைய நங்கையே! இதோ தோன்றும் இம்மலை கடிகை மலையாகும், அதோ நம்மெதிரே விளங்கித் தோன்றும் அந்த மலையே நமது திருத்தணி மலையாகும், இதோ கிடக்கும் இந்த அழகிய யாறு அத் திருத்தணிகை மலையின் பக்கத்தே ஒழுகுவதுகாண். (வி - ம்.) கடிகாசலம் - கடிகைமலை. இக்குன்று அக்குன்று என்னும் சுட்டுகள் அண்மையும் சேய்மையும் குறித்தன. (583) கண்டோ ரயிர்த்தல் (கண்டோர் கூற்று) | | செம்மைப் பதமலர் வின்மணி மோலி செறிதழும்பால் | | | மும்மைப் புவனத் தலைவனென் றோது முதல்வனைமா | | | தம்மைப் பிறப்பினு மித்தகு கானறி யாதவளே | | | இம்மைப் பிறப்பினென் னோபடர் கின்றன ரிச்சுரமே. |
(இ - ள்.) இத்தலைவனை இவனுடைய சிவந்த அடிகளாகிய தாமரை மலர் தம்பால் ஒளிபொருந்திய மணியிழைத்த முடிக்கலன்கள் உராய்ந்த |