| தழும்புண்மையால் மூன்றுலகத்திற்கும் அரசன் என்றுணர்த்தும், இவள் சிவந்த தாமரை மலர்போன்ற அடிகள் தம்மென்மையால் முற்பிறப்பினும் இவள் இத்தகைய கொடிய பாலைக் காட்டினை அறியாதவள் என்று உணர்த்தும் ; இத்தகையோர் இப்பிறப்பின்கண் இக்காட்டிற் செல்லா நின்றனர். இதற்குக் காரணம் யாதோ அறிகிலேம். (வி - ம்.) செம்மைப் பதமலர் என்பதனை மாது என்பதனோடுங் கூட்டுக. தழும்பால் என்பதற்கேற்ப மென்மையால் என்று வருவித்தோதுக. இத்தகுகான் என்றது இத்தகைய கொடிய காடு என்பதுபட நின்றது. (584) மண்டிய வன்பினைக் கண்டோர் கிளத்தல் இதுவுமது | | ஆவியுங் கண்ணுத லண்ணலுஞ் சுத்த வவத்தையிடை | | | மேவியங் கங்கு விராவுதல் காட்டும் வியப்பினதே | | | தேவியங் கண்ணல்பின் னேபல காற்செல்லுஞ் செல்வனுமக் | | | காவியங் கண்ணிபின் னேபல காற்செல்லுங் காதலித்தே. |
(இ - ள்.) இவர்கள் செல்லுங்கால் இத்தலைவி பெரிதும் காதலித்து அத்தலைவன் பின்னே பலகாலும் செல்லா நிற்பள். இத்தலைவன்றானும் நீலமலர்போலுங் கண்களையுடைய அத்தலைவியின் பின்னர்ப் பலகாலும் காதலித்துச் செல்லா நிற்பன். இங்ஙனம் இவர்கள் பின்னிச் செல்லும் காட்சி, உயிர் மலமகன்று தூய்நிலை எய்திய நிலையின்கண் அவ்வுயிரும் இறைவனும் செவ்விதொறும் மாறிமாறி முற்பட்டுத் தோன்றிக் கலக்குங் காட்சியை யொத்துப் பெரிதும் வியப்புத் தருவதாயிருந்தது. (வி - ம்.) சுத்தாவத்தையின்கண் நிகழுஞ் செயல் அனைத்தும் உயிர்ச் செயலென்று நோக்குழி அதன் செயலே எனவும், சிவன் செயல் என்று நோக்குழி அவன் செயலே எனவும் மாறி மாறிக் காணப்படுதல் ஈண்டுவமை என்க. (585) கடும்பக லடுப்பக் கண்டவர் விலக்கல் இதுவுமது | | நெருப்பா னியன்றது நீணெறி யுச்சியி னீள்கதிரோன் | | | உருப்பா னியன்மெல் லியதிவட் கேகலொண் ணாதிவணத் | | | தருப்பா லியன்ற குரம்பையல் லாற்றங்க வேறிடமில் | | | விருப்பா னிருந்துபின் னேகுதிர் வம்மின்கள் வெய்யவரே. |
(இ - ள்.) எல்லோரானும் விரும்பப்படும் நல்லியல்புடையீரே! நீயிர் செல்லும் வழியோ நெருப்பாலியற்றப்பட்டது போன்ற கொடிய வழியாகும். நெடிய வெப்பமுடைய ஞாயிறும் பெரிதும் வெதுப்பா நிற்பன். இவள் இயல்போ பெரிதும் மென்மையுடையது. ஆகலின் இப்பொழுது நீயிர் போதல் இயலாது. அதோ அம் மரத்தின் பக்கத்தே அமைக்கப்பட்டுள்ள சிறு குடிலையன்றி நீயிர்தங்கி இளைப்பாறுதற்குப் |