| (நூலாசிரியர் கூற்று) | | இரந்து பாங்கியைத் தன்னரு ளேவலி னிறுவிப் | | | பரந்த பல்வகை யொழுக்கெலாம் பயிற்றிய பின்னர் | | | அரந்தை தீர்த்துடன் போந்தவ னணங்கொடிவ் வாறு | | | கரந்த தன்னியல் காட்டுவா னிருந்தனன் காவில். |
(இ - ள்.) தோழியை இரந்து தனது அருள் ஏவலின்கண் நிறுத்திக் கொண்டு (தமிழ் வழக்கிற்) பரந்து காணப்படும் பல்வேறுவகை ஒழுக்கமெல்லாம் ஒழுகிய பின்னர் வள்ளியின் துன்பந் தவிர்த்து உடன் கொடு போந்த நம்பெருமான் அவ்வள்ளி யம்மையாருடன் இங்ஙனமாக மறைத்து வைத்துள்ள தன தியல்பெல்லாம் காட்டத் திருவுளங் கொண்டு அப்பொழிலிலே இருப்பானாயினன். (வி - ம்.) அரந்தை - துன்பம். அணங்கு - வள்ளி. (589) கவலைத் தோழியைச் செவிலி வினாதல் (செவிலி கூற்று) | | பொருந்தவந் தாமரைப் போதுக ணோற்பப் பொருப்பிடையாம் | | | பெருந்தவந் தாங்கிப் பெறாதுபெற் றேந்திய பிள்ளையெங்கே | | | திருந்தவந் தாண்டருள் வீராட்ட காசனைச் சேரலர்போல் | | | வருந்தவந் தாவினை வாடினை யென்னோ மயிலியலே. |
(இ - ள்.) அழகிய தாமரை மலர்கள் இவள் தம்பால் வந்தமரும் பொருட்டு நீர் நிலையினின்று தவஞ் செய்யா நிற்பவே, யாம் மலையின் கண்ணிருந்து பெரிதும் நோன்பாற்றியதனால் (வயிறு நொந்து) பெறாமலே பெற்று ஏந்திய வள்ளி யாண்டுளள்? நீ உள்ளம் திருந்தும்படி எளிவந்து ஆண்டருள்கின்ற வீராட்டகாசப் பெருமானை வணங்காத புல்லறிவினர் போன்று யாம் வருந்தும்படி நீ இத்தன்மையுடையையாய் வாடியுள்ளனை மயில்போல்பவளே இதற்குற்ற காரணம் யாது கூறுக. (வி - ம்.) பிள்ளை - மகவு ; ஈண்டு வள்ளி. சேரலர் - வணங்காதவர். இனை - இத்தன்மையுடையையாய். (590) ஆங்கெதிர் செவிலிக் கறத்தொடு நிற்றல் (தோழி கூற்று) | | அருவித் தடம்புன லாடின நீர்கொண் டவட்கரப்பத் | | | துருவித் தடம்புனற் றோற்றின னாங்கொரு தோன்றல்வந்திங் | | | குருவித் தடம்புயத் தானுருத் தோய்ந்தமைக் கொத்தபண்பால் | | | தருவித் தருமழை தாரணி காத்த றனக்கெளிதே. |
|