பக்கம் எண் :

களவுப் படலம்1241

மெல்லிய னினைஇ யல்லலிற் படிதல்
(செவிலி கூற்று)

 பூவிற் பயிற்றிப் புதுமலர் வார்தளிர் போதவுகும்
 காவிற் பயிற்றி வளர்த்தநம் பாவைமென் கான்மலர்கள்
 நாவிற் பயிற்றினு முள்ளமும் வேஞ்சுர நண்ணுபவோ
 ஏவிற் பயிற்றிய தோளா னொருவற் கியைவுகொண்டே.

(இ - ள்.) மலரின்மேல் நடைபயிற்றிப் புதிய மலர்களும் நெடிய தளிரும் மிகுதியாகப் புகாநின்ற பூம்பொழிலிலே ஆடல்பயிற்றி வளர்க்கப்பட்ட நம்முடைய பாவை போன்ற செவ்வியினுடைய கால்கள் ஆகிய செந்தாமரை மலர்கள், அம்பெய்யும் தொழிலிலே பெரிதும் பயிற்றப்பட்ட தோளையுடையா னொருகாளைக் கிணக்கங்கொண்டு, நாவாலே அதன் பெயரைக் கூறுமிடத்தும் அந்நாவேயன்றி நினைக்கு நெஞ்சமும் வேதற்குக் காரணமான பாலைநிலத்தின்கட் செல்லும் தகுதியுடையனவோ!

(வி - ம்.) பூவில் நடைபயிற்றிக் காவில் ஆடல் பயிற்றி என்க. ஓ - இரக்கப்பொருட்டு. ஏவு - எய்தற்றொழில். ஏவும் வில்லும் எனினுமாம்.

(594)

அஞ்சுத னினைஇ நெஞ்சுடைந் தழுங்கல்
இதுவுமது

 பார்வைப் புலியும்வன் சீயமு மற்றும் பதைப்பளெனச்
 சீர்வைப் பிடத்திற் செறியா தகற்றினஞ் செல்வியந்தோ
 நீர்வைப் பிடநனி நேடி யுயங்கிய நீள்சுரத்து
 வார்வைப் பிறையெயிற் றேனங்கள் காணினு மாழ்குவளே.

(இ - ள்.) எம் செல்வி, பார்வையின் பொருட்டு வளர்க்கும் புலியும் வலிய சிங்கமும் ஆகிய இன்னோரன்ன வல்விலங்குகளைக் காண்பாளாயின் அஞ்சி நெஞ்சம் பதைப்பளே என்று கருதி அவையிற்றை அவ்வழகி பயிலுமிடத்தே கட்டுதலின்றிப் புறத்தே அகற்றாநின்றோம். அத்தகைய அச்சமிக்கவள் அந்தோ! நீர் நிலையை நாடித் திரிந்து வருந்திய நெடிய கூரிய பிறைபோன்ற பற்களையுடைய பன்றிகளை நெடிய அப்பாலையின்கண் கண்டவிடத்தும் பெரிதும் அஞ்சி
வருந்துவளே!

(வி - ம்.) பார்வை - விலங்கினைக் காட்டி விலங்கினைப் பிடித்தற் பொருட்டு வளர்க்கும் விலங்குகள். சீர் - அழகு : ஆகுபெயர். வார் - நெடிய. வை - கூரிய. ஏனம் - பன்றி.

(595)

பேதைமை நினைஇப் பேதுற் றழுங்கல்
இதுவுமது

 குரைக்கு மருவிமத் துத்தடந் தாழி கொழுஞ்சுனைநெய்
 நுரைக்கு நுரையென் றிதுகடை வாரை நுவறியெனும்