பக்கம் எண் :

1242தணிகைப் புராணம்

 விரைக்கு நறுமலர்க் கூந்தலம் பேதைவிற் காளையென
 உரைக்கு மொருவன்குற் றேவலி னெவ்வா றொழுகுவளே.

(இ - ள்.) நறுமணங்கமழும் மலரணிந்த கூந்தலையுடைய அழகிய எம்முடைய மகள், ஒலித்துவீழும் அருவியினை மத்தென்றும், கொழுவிய சுனையினைப் பெரிய தயிர்த் தாழியென்றும் அதன்கண் நுரையாநின்ற நுரையினை வெண்ணெய் என்றும் கருதியவளாய் என்னை நோக்கி இந்தத் தயிரினைக் கடைவார் யார்? கூறுதி என்று வினவா நிற்பாள். இத்தகைய பேதைமையுடையோள் வில்லேந்திய காளை என்று கூறப்படுகின்ற ஒரு வீரனுடைய குறிப்பறிந்து அவனது குற்றேவலினின்று எவ்வாறு ஒழுகுவள்.

(வி - ம்.) குரைக்கும் - ஒலிக்கும். தாழி - பானை. நுரை நெய்யென் றென்க. நுவறி : முன்னிலை ஒருமை.

(596)

பெற்றாட் ககற்சி யுற்றாள் கிளத்தல்
(செவிலி நற்றாய்க் கறத்தொடு நிற்றல்)

 இளையனுந் தானிணை யில்லா முதியனுந் தானெனவாம்
 விளையருள் வேற்கை விசாகனிற் றோழி விராவுநம்பால்
 தளையவிழ் பூங்குழ லாளிளை யாடமி யாக்கிழமைக்
 கிளையழ நீங்கு முதியா ளடுத்த கிழவனுக்கே.

(இ - ள்.) தோழியே! ஆண்டால் இளமையுடையோனும் ஒப்பற்ற முதுமை யுடையோனும் தானே என்று ஆகாநின்ற விளையும் திருவருளையும் வேற்படையினை ஏந்திய கையினையும் உடைய முருகப் பெருமானே போன்று கட்டவிழ்ந்த மலரணிந்த கூந்தலையுடைய நம்மகள் அவட்கு உறவாய்க் கலந்த நம்மிடத்தே இளமையுடைய சிறுமியா யிருந்தனள் தன்னையடுத்த தலைவன் றிறத்தே தனக்குரிய சுற்றத்தார் அழும்படி தனியளாய்ப் பிரிந்து செல்லும் முதுமையுடையோளாகவும் ஆகினள்.

 "முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
 பின்னைப் புதுமைக்கும் பெயர்த்துமப் பெற்றியனே"

என்பது பற்றி இளையனு முதியனுந் தானேயாகும் விசாகன் என்றார். தமரின்பால் விளைவறியாப் பேதையாயிருந்து தலைவன்பால் முதுக்குறை வுடையாள் ஆகி உடன் போதலின் தலைவி இளையளும் முதியளும் தானே யாயினள் என்றாள் என்க.

(வி - ம்.) முதியாள் - கிழவி என்னும் பொருட்டாகலின் கிழவனுக்குக் கிழவி, நமர்க்குக் குழவி என்றாள் எனினுமாம்.

(597)

உற்றாளுரைப்பப் பெற்றாளழுங்கல்
(நற்றாய் கூற்று)

 பிள்ளைப் பருவங் கழிந்ததின் றேமுற்றும் பேதையெனும்
 தொள்ளைப் பருவந் தொடங்குவ தானது தூங்கழற்கான்