| | உள்ளைப் பிறன்பிணித் தேகொடு போதுமென் றோதினிந்தக் | | | கொள்ளைப் பெருமொழி யாங்குள தின்னுங் குவலயத்தே. |
(இ - ள்.) நஞ் செல்விக்கு இற்றை நாளே குழவிப் பருவம் முழுதுங் கழிந்தது, இன்றுதான் குறும்புடைய பேதைப்பருவந் தொடங்குவ தாயிற்று. இவ் விளம்பருவத்தே ஏதிலான் ஒருவன் ஒருத்தியின் நெஞ்சத்தைப் பிணித்து உடன்கொண்டு நெருப்பு மிக்க கொடிய பாலையிலே போனான் என்று கூறப்பட்ட கொள்ளையாகிய பெரிய மொழி இவ்வுலகத்தில் எவ்விடத்தே பிறந்தது. (வி - ம்.) பிள்ளைப் பருவம் குழவிப் பருவம். தொள்ளை - குறும்பு. தூங்கழல் - மிக்க நெருப்பு. உள் - நெஞ்சம். (598) மைவந்த கண்ணிக்குத் தெய்வம் பராவல் (நற்றாய் கூற்று) | | முருங்கோ மெனநின்ற தானவர் மூவரை மொய்யமரில் | | | மருங்கோ டறுத்தவஞ் ஞான்றுவிண் ணோர்வரு பூதர்படை | | | ஒருங்கோ டுயத்தணித் தோய்வா ரணமுய்ப்ப லொள்ளழற்கான் | | | இருங்கோற் றொடிக்குந் தழலா திருப்ப விரங்குகவே. |
(இ - ள்.) யாம் யாரானும் அழியேம் என்று தருக்கிநின்ற சூரபதுமன் முதலிய மூன்றசுரரையும் சுற்றத்தாரோடு கொன்றவன்று தேவரும் நின்னோடு வந்த பூதர்படையும் உய்யும்படி ஆறுதல் அளித்த முருகவேளே! நினக்கு யான் கோழிச் சேவல் கொடுவந்து செலுத்துவேன்! ஒள்ளிய தீக்கானமாகிய பாலைவழி பெரிய திரட்சியையுடைய வளையலையுடைய என் செல்விக்கு வெப்பஞ் செய்யாதிருக்கும்படி திருவருள் புரிவாயாக. (வி - ம்.) முருங்குதல் - அழிதல். மொய் - வலி. மருங்கு - சுற்றம். வாரணம் - கோழிச் சேவல். (599) கிள்ளைகுழைய வுள்ளங்குழைதல (நற்றாய் கூற்று) | | அவ்வையர் வாடின ரன்னைபின் னாளொடு மாயநல்லார் | | | தவ்வைய ளாவிய வானனத் தார்தடஞ் சாரலிவ்வூர்க் | | | கௌவையர் வீறினர் காணில மன்னையை யென்றுகனிக் | | | கொவ்வைய வாய்க்கிளி கூவியென் னுள்ளங் குழைவிப்பதே. |
(இ - ள்.) தமக்கைமார் துன்பத்தால் மெலிந்தனர். செவிலியோடு உசாத்துணைத் தோழியும் பிற தோழிமாரும், துன்பம் கலந்த முகத்தை யுடையராயினர். பெரிய மலைச்சாரலையுடைய இவ்வூரிற் புறங்கூறுவோர் ஊக்கமுற்று மிக்கனர். கொவ்வைக் கனிபோன்ற வாயையுடைய கிளி "அன்னையைக் காணிலேனே!" என்று அடிக்கடி கூவி என்னெஞ்சத்தைக் குழைவிப்பதாயிற்று. |