| (வி - ம்.) அவ்வை - தமக்கை. ஆயம் - மகளிர்குழு. கௌவையர் - பழிதூற்றுவோர். (600) நாடுறு செவிலி நற்றாய்க் குரைத்தல் (செவிலி கூற்று) | | சந்திர னாணுந் தனிக்குடை வேற்கரத் தான்றொடர | | | இந்திர ஞால விரதமுற் றோனெறு ழாற்சுலவும் | | | மந்திர ஞால மறிகடல் பாதலம் வானமற்றும் | | | முந்திர வாமுன்னர் நாடுவ றோழிநம் மொய்குழலே. |
(இ - ள்.) தோழி! திங்கள் நாணுதற்குக் காரணமான கொற்ற வெண் குடையினையும் வேலேந்திய கையினையும் உடைய முருகப் பெருமான் தொடர்தலானே இந்திரஞால மென்னுந் தேரினேறிச் சூரபதுமன் தனது வலிமையாலே சுழன்ற அண்டப் புறக்கடல் உலகமும் அலை புரளும் கடலும் பாதலமும் வெளியும் ஆகிய எல்லாவிடத்தும் நம் மகளை இரவுப்பொழுது வருமுன்னரே சென்று யான் தேடுவன்காண். (வி - ம்.) இந்திரஞால விரதமுற்றோன் - சூரபதுமன். சுலவும் - சுழலும். மந்திரம் - கடல். இரவு முந்துமுன் என்க. தோழி என்றது நற்றாயை. (601) தமித்துவழிச் செல்வோள் நிமித்த நாடல் (நிமித்தம் - நற்சகுனம்) | | கடப்பா ரலர்சுரங் காணுத லுண்டெனிற் கைதொழுவல் | | | இடப்பா லிருந்த விளங்கருங் காக்கை யெழுத்துவலம் | | | நடப்பா யதுபுரி யாயேனன் றாகக் கரைதிகண்டாய் | | | தொடப்பா லனவைக றோறு நினக்குத் தொகுக்குதுமே. |
(இ - ள்.) வழியின் இடப்பக்கத்தே இருக்கின்ற இளமையுடைய கரிய காக்கையே! நின்னைக் கைகூப்பி வணங்கித் தொழுவேன்! என் செல்வியும் அவள் கொழுநனும் இப்பாலையைக் கடந்திலராக யாம் அவரைக் காணுதலும் கூடும் எனின் நீ அவ்விடத்தினின்றும் எழுந்து வலமாகப் பறந்திடுவாய் ; அங்ஙனம் பறக்கமாட்டாயாயினும் நலமுண்டாக வேனும் கரைவாயாக. இவற்றில் ஒன்றைச் செய்தக்கால் நீ தின்னற் பாலவாகிய பொருள்களை நீ வேண்டுமளவு தொகுத்து நினக்குத் தருகுவேம். (வி - ம்.) காக்கை : விளி. தொடுதல் - தின்னல்மேனின்றது. தொகுக்குதும் என்ற பன்மை நற்றாய் முதலிய தமரை உளப்படுத்திற்று. (602) காதலி கூடச் சோதிடம் நாடல் (செவிலி கணியை வினாவியது) | | விண்ணும் வழுத்திய வீராட்ட காசன் விளங்கருளால் | | | எண்ணு மெழுத்து மெனவிரு கண்ணு மினிதுடையீர் |
|