| | கண்ணு மெனக்குக் கருமணிப் பாவையு மானகன்னிக் | | | கொண்ணு மினுமிங் குறைவெனின் வல்லையி னோதுமினே. |
(இ - ள்.) அமரர்களும் வந்து தொழாநின்ற திருவீராட்டகாசத்தே எழுந்தருளிய இறைவனுடைய விளங்காநின்ற அருளுண்மையாலே எண்ணும் எழுத்துமாகிய இரண்டு அறிவுக்கண்களையும் இனிதாகப் பெற்றுள்ள கணிவரே! எனக்குக் கண்ணும் அதன் உள்ளுறையும் கருமணிப் பாவையுமா யிருக்கின்ற என்மகள் இன்னும் இப்பாலை நிலத்தே இருத்தல் உண்டாயின் விரைந்து கூறுமின். (வி - ம்.) விண் - ஆகுபெயர். கன்னி - தலைவி. (603) கவலை நெறியிற் சுவடு காண்டல (செவிலி கூற்று) | | கடமறி யுங்கவுட் குஞ்சரம் வென்றவக் காளையொடு | | | படமறி யுங்கவின் மாதுசென் றாளென்று பன்னுவதே | | | தொடமறி யுந்தளி ரன்னமென் காலிற் சுவடுவலம் | | | இடமறி யுந்தடங் காற்சுவ டுங்கொண் டியவையிதே. |
(இ - ள்.) கையாற் றொடவே வாடும் மெல்லிய தளிர்போன்ற மென்மையுடைய என் செல்வியின் காற்சுவடும் அச்சுவட்டினை வலப் பக்கத்தும் இடப் பக்கத்தும் உடைத்தாகிய நம்பியின் பெரிய காற் சுவட்டினையும் தன்பாற்கொண்டு இந்த வழி மதமொழுகும் கவுளையுடைய யானையை வென்ற அவ்விளங் காளையோடு ஓவியம் தோற்றற்குக் காரணமான பேரழகுடைய அச்செல்வி செல்லா நின்றனள் என்று எனக்குக் கூறாநின்றது. (வி - ம்.) இயவையிதே என்புழி. இது : பகுதிப்பொருளது. இயவை -வழி. காலிற்சுவடும் எனல்வேண்டிய உம்மை செய்யுள் விகாரத்தாற் றொக்கது. இயவை மென்காலிற் சுவடும் தடங்காலிற் சுவடும் கொண்டு மாது சென்றாளென்று பன்னுவது என்க. (604) சுவடு கண்டவ ளவலமிக் கழுங்கல (இதுவுமது) | | பாகலை சொல்லி பரிபுரச் சீறடி பாவியந்தோ | | | மேகலை யல்குன் மிதிப்பக் கொடேன்வெவ் வழற்கதித்துப் | | | போகலை நீரிற் றுளும்பும்வெண் டேரைப் புகன்றுபுகன் | | | றாகலை யோடுஞ் சுரத்தினுங் கண்டுள தாவியின்றே. |
(இ - ள்.) வெவ்விய நெருப்பினின்றும் தோன்றி நெடிய அலை வீசும் நீர்நிலைபோன்று அசையா நிற்கும் வெள்ளிய பேய்த் தேரை நீரென்று கருதி விரும்பி விரும்பி ஆவும் மான்களும் ஓடாநின்ற இப்பாலை வழியின்மிசை, இன்று மேகலையையும் அல்குலையும் பாகினைத் தன்னினிமையாலே வருந்தச் செய்யும் சொல்லையுமுடைய என் மகளின் |