| பரிபுரமணிந்த சிறிய அடிகள் மிதித்தமையைக் கண்டும் தீவினையாட்டியேன் என் உயிரை விட்டிலேன் அந்தோ! அஃது இன்னும் உளதாயிற்று. (வி - ம்.) என் அன்பு மெய்யன்பாயின் என் உயிரை விட்டிருப்பேன் அஃதிருத்தலான் அஃது பொய்யன்பே போலும் என்று வருந்தியவாறு ஆவி கொடேன் அஃது இன்னும் உளது என்க. (605) வெற்றி கண்டு தெற்றென மகிழ்தல் (இதுவுமது) | | இவ்வாய் மடந்தையஞ் சாநிலை யாக்கி யினிதெதிர்ந்து | | | செவ்வான் கிடந்தொளிர் வெண்முகில் போலச்செந் நீர்புடைசூழ்ந் | | | துவ்வாய் மடங்கல் கிடப்ப வுரத்தூ டயின்மடுத்தோன் | | | அவ்வாய் மடங்கன் முகற்படுத் தோம்பு மறுமுகனே. |
(இ - ள்.) இதோ இவ்விடத்தினை என் செல்வி அஞ்சாமல் நிற்றற் குரிய இடமாக்கிவிட்டுத் தன்மேற் பாய்ந்த சிங்கம் செக்கர் வானத்திடையே கிடந்து விளங்காநின்ற வெண்முகில் போன்று குருதிபுடை சூழப்பட்டு உவ்விடத்தே மாண்டு கிடக்கும்படி இதன் நெஞ்சினூடு வேற்படையினைச் செருகிய இத்தலைவன் பண்டு அப் போர்க்களத்தின் கண் சிங்கமுகாசுரனைக் கொன்று உலகினைப் பாதுகாத்தருளிய ஆறுமுகப் பெருமானையே ஒப்பான். (வி - ம்.) வாய் - இடம். உவ்வாய் - உவ்விடம். அவ்வாய் என் புழிச் சுட்டு, பண்டறிசுட்டு. மடங்கன்முகன் - சிங்கமுகன். (606) பூம்பொழி னோக்கித் தேம்பினள் கிளத்தல் (இதுவுமது) | | மரவம் பொழின்மலர்ப் பாடலங் கோங்கம்வண் பாலைதுற்றும் | | | குரவம் பொழில்சிறி தேநும்மிற் கண்டாங் குளிர்நிழறேன் | | | விரவம் புதுமலர் நல்கி விளையாட் டயரச்செயா | | | தரவம் படுகழ லானொடு போக்கே யமர்ந்தனிரே. |
(இ - ள்.) மரவம் பொழிலே! மலர்ந்த பாடலம் பொழிலே! கோங்கம் பொழிலே! பாலைநிலத்திலே செறிந்த வளவிய குரவம் பொழிலே! நும்பால் சிறுமைக்குண முண்மையை யாம் கண்டேம் ; எற்றாலெனின், ஈண்டுப் போந்த என் செல்விக்குக் குளிர்ந்த நுந்நீழலையும் தேனையும் நும்பாற் கலந்த அழகிய மலர்களையும் வழங்கி ஈண்டே விளையாடச் செய்யாமல், ஓசையுண்டாகும் வீரக் கழல்கட்டிய அக்காளையோடு அவள் போதலையே நீயிரும் விரும்பினீரல்லிரோ! ஆகலான். (வி - ம்.) பொழில் என்பதனை பாடலம் கோங்கம் என்பதனோடும் ஒட்டுக. மரவம் - மராமரம். குரவம் - குராமரம். (607) |