பக்கம் எண் :

களவுப் படலம்1247

மலர்கொய் யெயின மாதொடு வினாதல்
(எயின மாது - பாலைநிலப் பெண்)

 மிண்டுளி போழ்ந்த விரிகற் சுனைதொறு மென்புனற்கு
 மண்டுளி யங்கள் வழங்கிச் சுரஞ்செலெம் மாதினைத்தேன்
 நுண்டுளி மாமலர் நோக்கிய நோக்கினை நோக்கினையே
 கண்டுளி யேகற காதென்றி யேசொல் கருங்குயிலே.

(இ - ள்.) கரிய குயில்போன்ற இனிய மொழியினையுடைய எயின மகளே! குடைகின்ற உளியால் அகழப்பட்ட விரிந்த கல்லின் கட் சுனைதோறும் ஊறாநின்ற சிறிய நீரைத் தேடிச் செல்லா நின்ற கரடிகள் திரியா நிற்கும் இப்பாலையிலே செல்லாநின்ற எஞ்செல்வியாகிய தேனாகிய நுண்ணிய துளிகளையுடைய தாமரை மலர்போன்ற விழிகளையுடையாள் ஒருத்தியைக் கண்டாயோ? கண்டபொழுது "நீ இவ்வழியிற் செல்லுதல் தகாது" என்று தடுத்தனையோ? சொல்வாயாக!

(வி - ம்.) மிண்டுதல் - குடைதல் ; குத்திப் பெயர்த்தல். மென்புனல் என்புழி மென்மை சிறுமை குறித்து நின்றது. உளியம் - கரடி. மாதினை என்றவள் அடையாளங் கூறுதற்கு மலர்நோக்கு என்றாள். மலர்நோக்கு - அன்மொழித் தொகை. கண்டுளி என்புழி - உளி இடப்பொருள் உணர்த்துமோ ரிடைச்சொல். கருங்குயில் என்றது எயினப் பெண்ணை. அன்மொழித் தொகை.

(608)

கள்ளிவர் குருந்திற் புள்ளொடு புலம்பல்
(செவிலி கூற்று)

 கல்லிரை தேரினும் வீழ்துணை நீங்கிற் கபோதகநோய்
 அல்லிரை யோத மனையது பார்ப்பை யயல்விடுத்தல்
 வல்லிரை நோவ வழக்குமுண் டோவன்பன் மாதைவிடச்
 சொல்லிர வாமை துணிந்தனி ரென்று சுரக்குயிலே.

(இ - ள்.) புறவுப் பெடையானது கல்லாகிய தனது இரை தேரும் பொழுதும் தன்னை விரும்பும் துணையாகிய சேவல் பிரியின் அப்பெடையுறும் துன்பம் இரவின்கண் ஆரவாரிக்கும் கடற்பெருக்கினை ஒக்கும். நீயிர் நும் குஞ்சையே அயலார் கூட்டின்கண் விடுத்தற்குரிய வன்மை யுடையீர் இத்தகைய இரக்கமற்ற நும்மை நோக்கி "நீயிர் அன்புடைய அத் தலைவன் என் மகளை விட்டும் போம்படி நும்மினிய சொல்லால் இரவாது அவள் போதலையே துணிந்தனிரே! " என்று நோதற் கிடனில்லையே!

(வி - ம்.) புறவு, கல்லைத்தின்னும். வீழ்துணை : வினைத்தொகை. கபோதகம் - புறவு.

(609)

மாவிர தியரை மேவினள் வினாதல்
(இதுவுமது)

 வெள்ளிப் பொருப்பரு வித்திர ளென்னவெள் ளென்புபொடி
 அள்ளிப் பொதிந்த மருமத் தனிரய லான்றுணையே