பக்கம் எண் :

களவுப் படலம்1253

(இ - ள்.) வில்லை எடுத்தனர். அம்புகளை ஆராய்ந்து கொண்டனர். மறவுரைகள் பேசி ஆரவாரித்தனர். அக்குன்றவர் கூட்டமெல்லாம் இவ்வாறு ஓரிடத்தே குழுமினர். மலை நிலத்தே யோங்கிய தம் குடியுளாருடைய பெயர் தெரிதற்குக் காரணமான அக்குறிஞ்சி நிலக் காடெங்கும் பற்கள் உயர்ந்த பேய்கள் தம்மைத் தொடரும்படி பரவிச் செல்லா நின்றனர்.

(வி - ம்.) வாளி - அம்பு. கல் - மலை. தம்பெயர் - குறிஞ்சி நில மக்கள் என்பது. பரந்தனர் - முற்றெச்சம்.

(622)

 குவட்டுத் தாரையுங் குன்றிடை முடுக்கருங் கரிந்த
 கவட்டுச் சோலைய கானமுங் கைபரந் தெழுவோர்
 சுவட்டுத் தாரியிற் றொடர்ந்தனர் சூழ்பொழி லமிழ்தம்
 சவட்டுத் தேமொழி தனைத்தனிக் காளைபாற் கண்டார்.

(இ - ள்.) குவட்டு வழிகளினும் குன்றுகளிடையே யுள்ள முடுக்குகளினும் கரிந்துபோன கிளையையுடைய சோலையினையுடைய பாலை நிலத்தினும் இருபக்கத்தும் பரவி எழுந்த அவ்வேடர் சுவட்டினை யுடைய (தலைவன் தலைவியர் சென்ற) வழிமேற் சென்று ஆண்டொரு மரஞ்சூழ்ந்த சோலையின்கண் அமிழ்தத்தை வெல்லும் இனிய மொழியினையுடைய வள்ளியை ஒப்பற்ற முருகன் பக்கத்தே இருப்பக் கண்டனர்.

(வி - ம்.) குவடு - சிகரம். தாரை - வழி. முடுக்கர் - முடுக்கு. கவடு - கிளை. கை - பக்கம். சுவட்டுத்தாரி - நடைவழி; சுவட்டைத் தரித்திருப்பது. சவட்டுத்தேமொழி என்புழி வலித்தல் பெற்றது.

(623)

 பொங்கு மாகடல் வளைந்தெனப் புறக்கொடை யொழிய
 எங்கும் வாங்கினர் வாங்கின ரிடம்படு வார்வில்
 புங்க வார்கணை பூட்டினர் காளைமேற் பொழிந்தார்
 அங்கண் மாதரா ளஞ்சின ளழுங்கினள் வெயர்த்தாள்.

(இ - ள்.) பொங்கா நின்ற பெரிய கடல் வளைத்துக்கொண்டாற் போன்று வளைத்துக்கொண்டு புறங்கொடுத்தோடிப் போகாதபடி எல்லாப் பக்கத்து நின்று இடக்கையிலேந்திய நெடிய வில்களை வளைத்து, புங்கவமாகிய நெடிய அம்புகளைத் தொடுத்து முருகப் பெருமான் மேற் பொழியலானார். அது கண்ட அழகிய கண்ணையுடைய வள்ளி நாயகியார் பெரிதும் அஞ்சி வருந்தி மெய் வெயர்த்தனர்.

(வி - ம்.) புறக்கொடை - முதுகிடல், வாங்கினர் - வளைத்தனர். புங்கமாகிய வார்கணை என்க. அங்கண் - அவ்விடத்தே எனினுமாம்.

(624)

 ஆன்ற லைப்பொடித் தெழுமருப் பஞ்சுமே வேங்கை
 கான்ற லைப்பொடித் தெழுங்குழல் கவலல்கா ணென்னாத்