| நிகழ்கின்ற விம்மாசித் திங்கள்வரு | | பூசத்தி னிகழ மன்றல் | | திகழ்கின்ற பலவினையு முயறியெனத் | | தினைப்புனத்துச் செல்வி முன்மண் | | அகழ்கின்ற நெட்டுயிர்ப்புத் துளைக்கைமுழு | | மாவென்ன வடுத்தெல் லோரும் | | புகழ்கின்ற மகனாரை வியங்கொண்டா | | ரருள்சுரந்து பூத நாதர். |
(இ - ள்.) பூதங்களின் தலைவராகிய சிவபெருமான் திருவருள் சுரந்து தினைப்புனத்தின் கட்சென்று வள்ளிநாயகியார் முன்பு மண்ணைத் துழாவி அகழாநின்ற நெடிய மூச்சினையும் துளையினையும் உடைய கையையுடைய களிறு என்னும்படி சென்று எல்லோரானும் புகழப்படுகின்ற விநாயகப் பெருமானை நோக்கி எந்தாய்! நீ வள்ளிநாயகிக்கும் நின்றம்பிக்கும் நிகழவேண்டிய திருமணம் நிகழாநின்ற இந்த மாசித் திங்களிலே வருகின்ற பூச நாளில் நன்கு நிகழும்படி அதற்காவனவாகிய பல செயல்களையும் செய்க என்று ஏவா நின்றனர். (வி - ம்.) முயறி - முயல்வாயாக. செல்வி - வள்ளி. முழுமா - பெரிய யானை. வியம் - ஏவல். (5) | தரைகுழிக்கும் புழைத்தடக்கைத் தலைமைந்த | | னருள்கொண்டு சார்ந்தோர் பாங்கர் | | வரைகிழிக்கும் படையானை முகநோக்கிக் | | கந்தகிரி வரைப்பின் வைகும் | | விரைகொழிக்கு மலர்க்கூந்தன் மெல்லியலை | | வருத்தியென விளம்பித் தெய்வ | | உரைகொழிக்கு முடங்கறச திசையினுஞ்சென் | | றுறக்கணத்தை யுறுத்துப் பின்னர். |
(இ - ள்.) நிலத்தைத் தீண்டிக்குழிக்கும் நீண்ட பெரிய துளையை யுடைய துதிக்கையையுடைய மூத்த பிள்ளையார் அவ்வருட்பணியைத் தாங்கி ஒருசார் கிரவுஞ்ச மலையைக் கிழித்த வேற்படையுடைய முருகப் பெருமானை நோக்கி நீ கந்தமலைக்கண் இருக்கின்ற மணமிக்க மலரணிந்த கூந்தலையும் மெல்லிய இயல்பினையுமுடைய தேவயானையை ஈண்டு வருவிப்பாயாக எனப் பணித்துப் பின்னர்க் கடவுட்டன்மை யுடைய மொழிகண்மிக்க திருமணவோலை பத்துத் திசையினுஞ்சென்று சேருதற் பொருட்டுச் சிவகணத்தாரை ஏவிப் பின்பு. (வி - ம்.) தலைமைந்தன் - முதற்பிள்ளை, கையினையுடைய தலை மைந்தன் என்பதுமாம். மெல்லியல் - தேவயானை. (6) |