பக்கம் எண் :

1264தணிகைப் புராணம்

 கடியயர்மண் டபநிருமித் திடுதியெனக்
           கடவுளர்தச் சனைக்கூஉ யேவிக்
 கொடிதுவன்று நகரறியக் குணின்முரசி
           னெருக்கிமணங் கூறு கென்னாத்
 தொடிபொலிந்த மணித்தடக்கை வள்ளுவனை
           வியவரினாற் றூண்டி விண்ணோர்
 முடிதுளக்க வவரவர்க்குத் தக்கபணி
           விடைமுறையி னிறுவி னானால்.

(இ - ள்.) திருமண நிகழ்தற்குரிய மண்டபத்தை இயற்றிடுவாயாக என்று தேவதச்சனாகிய மயனை அழைப்பித்து ஏவிப் பின்னர், பணியாளர்களாலே தோள்வளையிற் செறித்துப் பொலிவுற்ற மணிகள் திகழாநின்ற பெரிய கையினையுடைய வள்ளுவனை, கொடிகணெருங்கிய திருத்தணிகை நகரத்தே யுள்ளார் அறியும்படி கடிப்பினாலே முரசத்தை அடித்து முழக்கி இத்திருமணச் செய்தியைக் கூறும்படி தூண்டுவித்து, தேவர்கள் தலையசைத்துப் பாராட்டும்படி வரிசையறிந்து அவரவர் தகுதிக்கேற்பப் பணிவிடை செய்யும்படி முறைமையினாலே அத்தொழில் வல்லுநரை அத்தொழிலில் நிறுவினன்.

(வி - ம்.) கடி - மணம். கடவுளர்தச்சன் - மயன். வியவனார் - பணியாளர்.

(7)

வேறு

 மூத்தவ னருளிய மொழியுட் கண்டுகல்
 சீத்தவை வேலினான் றெய்வ யானையைப்
 போத்தனுங் கிவ்வரைப் போந்து தம்மென
 ஏத்துயர் வீரனை யேவி வைகினான்.

(இ - ள்.) குன்றமுடைத்த வேற்படையினையுடைய செவ்வேட் பெருமான் தன் தமையன் தனக்கிட்ட கட்டளை மொழியின் நயத்தைத் தன்னுளாராய்ந்து கண்டு மகிழ்ந்து புகழானுயர்ந்த வீரவாகுவினை நோக்கி நீ சென்று நம் தெய்வ யானையைத் தீவினை அழிதற்குக் காரணமான இத்திருத்தணிகை மலைக்கு அழைத்து வருதி என்று ஏவி யருளினன்.

(வி - ம்.) மூத்தவன் - யானைமுகன். வை - கூர்மை, போத்து : நீட்டல் விகாரம் ; பொத்து - தீமை ; குற்றம்.

(8)

 கடவிய விபமுகன் கருணை தாங்குபு
 தடவிய கடவுளர் தச்சன் மாமயில்
 நடவிய நாயக னல்வி னைக்குறு
 மிடவிய மண்டப மிழைக்க முன்னினான்.

(இ - ள்.) தன்னை ஏவிய யானைமுகப்பெருமானுடைய திருவருட் பணியைத் தலைமேற்கொண்டு வணங்கிய மயன் என்னுந் தெய்வத் தச்சன்,