பக்கம் எண் :

வள்ளிநாயகி திருமணப் படலம்1269

 உற்பல வோடைக ளுஞற்றும் பந்தர்பால்
 பற்பல விம்மிதம் பயிற்றி யாக்கினன்
 கற்பகச் சோலையுங் காமர் வல்லியும்
 பொற்புற அவற்றயல் பூப்ப ஆக்கினான்.

(இ - ள்.) இவ்வாறியற்றிய பந்தரின்கண் செங்கழுநீரோடைகளும், கற்பகச் சோலையும், காமவல்லியும் அவ்வோடைகளின் பாங்கர் பொலிவுண்டாக மலரும்படி பலவாகிய மருட்கை விளைக்கும் செயல்களைச் செய்தமைத்தனன்.

(வி - ம்.) காமவல்லி - கற்பக மரத்திற் படரும் ஒரு பூங்கொடி.

(23)

 சலமென நிலனிடைச் சார்ந்து நாணவும்
 நிலனெனப் புனலினை நேர்ந்து நாணவும்
 சிலையென விவர்ந்தவல் சேர்ந்து நாணவும்
 பலபல விம்மிதம் பாங்க ரீட்டினான்.

(இ - ள்.) அமரர் முதலியோர் நீர் என்று நினைத்து நிலத்திடை மிதித்து நாணமடையவும், நிலனென்று நினைத்து நீரில் வீழ்ந்து நாண மடையவும், கல்லென்று நினைத்து ஏற முயன்று பள்ளத்திலே சென்று நாணமடையவும், இவ்வாறு பற்பல மருட்கைப் பொருள்களைப் பக்கங்களிலே செறித்தமைத்தனன்.

(வி - ம்.) அவல் - பள்ளம். விம்மிதம் - மருட்கை.

(24)

 மாலைவெள் ளருவிகண் மண்ணிற் றாழ்வன
 கோலவிண் ணத்துராய்க் குளத்திற் றேங்கவும்
 சாலவெள் ளருவியாய்த் தாழ்வ ரைச்சுனை
 ஏலுநீர் வரைமுகட் டெழலு மாக்கினான்.

(இ - ள்.) நிலத்தில் வீழுமியல்பினவாகிய வெள்ளருவிகள் நிலத்தில் வீழாமல் அழகிய வானுலகத்தே சென்று ஆண்டுள்ள குளங்களில் தேங்கவும், அடிமலையில் உள்ள சுனையினியன்ற நீர் மிகவும் வெள்ளிய அருவியாகி மலையுச்சிக்கு ஏறா நிற்பவும் இயற்றினான்.

(வி - ம்.) மாலை - இயல்பு. மண்ணிற்றாழ்வன மாலைய வெள்ளருவிகள் என்க.

(25)

 எவரெவ ரெவ்வுழி யாது முன்னினார்
 அவரவர்க் கவ்வுழி யதுப யப்படச்
 சவிமணி யிருநிதி தருவுந் தேனுவும்
 நவமுற வயின்றொரு நலக்க நல்கினான்.

(இ - ள்.) திருமண விழாவிற்கு வந்தோருள், யார் யார் எவ்விடத்தே எப்பொருளை விரும்பினாரோ அவரவர் தாம்தாம் விரும்பிய