(வி - ம்.) விருத்தர் - முதியோர். வெஃகுதல் - விரும்புதல். புரை - குற்றம். சரித்தல் - இயங்கல். (29) | சிறக்குமண் ணவர்க்கெலாந் தெய்வ லோகமாய்த் | | துறக்கமுள் ளவர்க்குமேற் றுறக்க நாடதாய்ப் | | பிறக்கமுற் றிடப்பெரு வளத்த தாக்கினான் | | அறக்குணத் தவர்பயி லடுக்கன் முற்றுமே. |
(இ - ள்.) அறப் பண்புடையோரே மிக்கு வாழ்கின்ற அத்திருத்தணிகை மலை முழுதும், சிறப்புடைய இந்நிலவுலகத்தவர்க்கெல்லாம் தேவருலக மாகவும், அத்தேவருலகத்தவர்க்கெல்லாம் சிவலோகமாகவும், விளங்கும்படி பெரிய வளமுடையதாகச் செய்தமைத்தான். (வி - ம்.) வானவரும் மண்ணுலகிற் றோன்றியே வீடு பேறடைதல் கருதிச் சிறக்கும் மண் என்றார். தணிகைமலை யுண்மையாற் சிறக்குமண் என்றார் எனினுமாம். மேற்றுறக்கம் என்றது சிவலோகத்தை. (30) | நீடிய பெருங்கவி னேர்கண் டாரெனின் | | வீடெனப் படுவது வேண்டற் பாலதோ | | பீடுறு பெருந்தவத் தார்க்கு மிங்கெனக் | | கோடுயர் வரையெலாங் கோடித் தானரோ. |
(இ - ள்.) அழிவற்ற பேரழகு என்பதனைக் காட்சியளவையானே கண்கூடாக நேரிற் கண்டார் ஆதலின், அத்தகைய பேறு பெற்ற பெருமையுறுகின்ற பெரிய தவத்தினை யுடையோர்க்கும் இவ்வுலகின் கண் உவமை என்பது ஒன்று கூறுதல் வேண்டாவன்றோ. இவ்வண்ணமாகக் குவடுயர்ந்த அத்திருத்தணிகை மலையை அணி செய்தனன். (வி - ம்.) தவம் இத்தகைய பேற்றினை யளித்தலின் தவமுடை யோர்க்கு உவமையில்லை என்றவாறு. (31) வேறு | வியவர்கள் விரைந்து சென்று விமலனா ரருளீ தென்ன | | இயவருட் டலைமை பூண்டோ னினியன நுகர்ந்து பூசிப் | | புயலுமிழ் மின்னு வீசும் பொலங்கல னணிந்து போற்றி | | நயனுறு கருவி யெல்லா நயத்தக வமைத்துக் கொண்டு. |
(இ - ள்.) ஏவலர்கள் விரைந்து சென்று இறைவனுடைய திருவருட் பணி இஃதென்று கூறுதலானே இசைவாணருட்டலைவனானவன், இனிமையுடைய உணவினையுண்டும், இனிமைமிக்க நறுமணப் பொருள்களைப் பூசிக்கொண்டும், முகில் விடுகின்ற மின்னல் போன்று ஒளிவிடும் பொன்னணிகலன்களை அணிந்துகொண்டும், பேணி, நயமுடைய இசைக்கருவிகளையெல்லாம் நன்மையுண்டாக அமைத்துக் கொண்டும். (வி - ம்.) வியவர் - ஏவலர். இயவர் - இசைக்கருவியாளர். (32) |