| | இழுக்கிப் படுசாந் தினையா மணிவீ திகளில்லை | | | ஒழுக்கிப் புனல்பொன் னுதவாத் தலைவாய் தல்களில்லை | | | முழுக்கட் டொடைதா ளிடறா வகன்முன் றில்களில்லை | | | வழுக்கித் தமியை யெமியாய் நுகரா மனையில்லை. |
(இ - ள்.) அத்திரு நகரத்தின்கண் செல்வோர் சந்தனச் சேற்றில் வழுக்கி வருந்தாத அழகிய வீதிகளில்லை. நீரோடு பொன் வழங்காத தலைவாயில்களும் இல்லை. முழுமையான தேன்துளிக்கும் மலர்மாலைகள் கால்களிலே இடறப்படாத அகன்ற முற்றங்களுமில்லை, தனியாயிருந் துண்டலினின்றும் விலகிக் கூடியிருந்துண்ணாத மனைகளும் இல்லை. (வி - ம்.) இனையா - துன்புறாத. தொடை - மாலை. தமி - தனிமை. எமி - கூட்டம். (58) | | உழாலிற் பொலிவண் டிவர்பூந் தொடைநான் றொளிர்பந்தர் | | | எழாலிற் பொலிமெல் லிசையுங் குரலு மெறிசெங்கை | | | முழாலிற் பொலிவண் முழவும் பரத முறையோடும் | | | தழாலிற் பொலிநா டகவெள் ளமிழ்துந் தழைவுற்ற. |
(இ - ள்.) கிண்டுதற்றொழிலாலே பொலிவுடைய வண்டுகள் மொய்க்கும் மலர்மாலைகள் நாலுதலானே திகழாநின்ற பந்தரின்கண் யாழினாலே பொலிதலையுடைய மெல்லிய இசையும் மிடற்றுப் பாடலும் எறியாநின்ற சிவந்த கை முழக்குதலானே பொலிவுறாநின்ற இசை வளனுமுடைய முழவும் பரத நூன்முறையோடும் தழுவுதலானே பொலிகின்ற கூத்தாகிய வெள்ளிய அமிழ்தும் தழைத்தன. (வி - ம்.) உழால் - உழுதல். எழால் - யாழ். முழால் - முழக்கல். தழால் - தழுவுதல். (59) வேறு | | மணிது ளக்கியு மணியரிச் செண்ணவஞ் சிலம்பின் | | | இணைது ளக்கியும் யாழ்நரம் புளர்ந்துவே றியைத்தும் | | | கணிது ளக்கிய சுணங்கிள முலையவள் களவின் | | | அணிது ளக்கினர் பாடின ரனிதகோ டியரே. |
(இ - ள்.) எண்ணிறந்த கூத்தர்கள், மணிகளை அசைத்தும், மணியாகிய பரலையுடைய சித்திரிக்கப்பட்ட அழகிய சிலம்புகளை அசைத்தும், யாழின் நரம்பினை வருடித் தம்மிடற்றுப் பாடலோடியைத்தும், வேங்கை மலர்போன்ற தேமலினையுடைய இளமுலைகளையுடைய வள்ளி நாயகியாரின் களவொழுக்கத்தின் அழகினை விளக்கினவராய்ப் பாடா நின்றனர். (வி - ம்.) முலையவள் - வள்ளி, களவு - களவொழுக்கம். அனிதம் - அளவின்மை. கோடியர் - கூத்தர். (60) |