| (இ - ள்.) வானத்தே ஓரிடத்தே நிறுத்திப் பின் கீழே யிறக்கிய வானவூர்தியினின்று மிறங்கித் திருக்கோயிலினுட் சென்று தங்கொழுநனை வணங்கினர் ; உவகையாலே விழிகளிற் பெருகிய நீரை யுகுத்தனர், அதுகண்ட பெருமான் அப் பெருமாட்டியார்க்குத் திருவருட் பார்வை நல்கித் தன் இடப்பாகத்தே அமர்த்த அப்பெருமானோடு இனிது அளவளாவி யிருப்பாராயினர். (வி - ம்.) உத்தன் - உரியவன் ; கொழுநன். அண்ணல் - முருகவேள். (67) வேறு | | மங்கல முடங்கல்வர வேற்றுமறை ஞாளிப் | | | புங்கவன் மகம்பொடி படுத்தபுகழ் வீரன் | | | துங்கமத யானைதுனை யக்கடவு சாத்தன் | | | இங்கிவர்க ணம்பலவு மீண்டவடை குற்றார். |
(இ - ள்.) திருமணமுடங்கல் வர ஏற்றுக்கொண்ட வைரவனும் ; தக்கனுடைய வேள்வியைத் துகள் படுத்திய புகழையுடைய வீரபத்திரனும், தூய மதயானையை விரையச் செலுத்தா நின்ற ஐயனாரும், என்னும் இவர்களும் இவருடைய பரிவாரங்கள் பலவும் செறிந்து வந்து அடைந்தனர். (வி - ம்.) மறையாகிய ஞாளி என்க. ஞாளி - நாய். மகம் - தக்கன் வேள்வி. சாத்தன் - ஐயன், அரிகரபுத்திரன். (68) | | பாதல வுருத்திரர்கண் மூவர்பது மத்தோற் | | | காதியரு ளைவரிரு மூவரவ ரீன்றோர் | | | ஆதவர்ம ருத்துவர்வ சுக்களென வான்றோர் | | | ஓதுபதி னெண்கணமு மாதவரு முற்றார். |
(இ - ள்.) பாதலவுருத்திரர் மூவரும் பதுமாசுரனைக் கொன்றருளிய ஐவரும் இருமூவருமாகிய பதினோரு உருத்திரர்களும் இவர் மக்களும் பன்னிரு ஆதித்தரும் தேவமருத்துவரிருவரும் வசுக்கள் எண்மரும் சான்றோர்களாற் கூறப்படும் பதினெண்கணத்தவரும் முனிவர்களும் ஆகிய இவரெல்லாம் வந்துசேர்ந்தனர். (வி - ம்.) பதுமத்தோன் - பதுமாசுரன். ஐவர் இருமூவர் - பதினோருருத்திரர். ஆதவர் - ஆதித்தர். (69) | | தத்தமனை மாதர்புடை சாரமல ரோனும் | | | மைத்தவுரு வத்தனும் வலாரிமுத லோரும் | | | பைத்தநதி குன்றுபல காலமுதல் யாவும் | | | எத்திசையி னோருமெழில் கொண்டணவி னாரால். |
|