பக்கம் எண் :

1284தணிகைப் புராணம்

(இ - ள்.) தங்கள் தங்கள் மனைவியர் தங்கள் தங்கள் பக்கத்தே வரப் பிரம தேவனும், கரிய நிறமுடைய திருமாலும் தேவேந்திரனும் முதலிய தேவர்களும் பசிய யாறுகள் பலவாகிய மலைகள் காலமுதலியனவுமாகிய இவற்றின் ஆதிதெய்வங்களும் பிறவும் எல்லாத் திசையினரும் புத்தழகு புனைந்துகொண்டு வந்து சேர்ந்தனர்.

(வி - ம்.) மலரோன் - பிரமன். மைத்தவுருவத்தன் - திருமால். வலாரி - இந்திரன்.

(70)

வேறு

 சேந்தெரி தும்மு வைவேற் சேவக னருளப் பெற்ற
 காந்தெரி கணைவில் வேடர் கதழ்ந்துதம் மடுக்க லண்மி
 ஏந்தக லல்குற் குற்ற திற்றென விளம்ப லோடும்
 பூந்துண ரலங்கற் றிண்டோட் புள்ளுவர் தலைவன் கேளா.

(இ - ள்.) சினந்து நெருப்பினைக்காலும் கூர்த்த வேற்படையேந்திய முருகப் பெருமானுடைய திருவருட்கிலக்கான கனல்கின்ற தீயினையுடைய கணைகளையும் வில்லினையும் உடைய வேடர் விரைந்து போய்த் தமது மலையினை அடைந்து வேடமன்னனுக்கு வள்ளியம்மையார்க்கு நிகழ்ந்தது இஃதென்று கூறியதுணையானே பூங்கொத்துக்களாற் புனைந்த மாலையணிந்த அம்மன்னன் அச்செய்திகளைக் கேட்டு,

(வி - ம்.) சேந்து - சினந்து. எரி - நெருப்பு. சேவகன் - வீரன் ; முருகன். ஏந்தகலல்குல் - பன்மொழித்தொகை. வள்ளி. புள்ளுவர் - வேடர்.

(71)

 கழிமகிழ் சிறந்து சொல்வான் கைதொழு திறைஞ்சிப் போற்றி
 வழிபடு கடவு ளாவா மருகனாந் தலைமை பெற்றாம்
 பிழிமகிழ்ந் தினிய வுண்டு பேரணி யணிவா யென்னாப்
 பொழிவிழி மனையை யாற்றி யாரையும் புலம்பிற் றீர்த்தான்.

(இ - ள்.) மிக்க மகிழ்ச்சியினாலே சிறப்புற்று, வள்ளியின் பிரிவாற்றாமையானே கண்ணீர் பொழியா நீன்ற விழிகளையுடைய தன் மனைவியை நோக்கிக் கூறுபவன், "அன்புடையோய்! வருந்தாதே கொள்! நாம் நாடோறும் கைகுவித்து வணங்கி வாழ்த்தி வழிபடா நின்ற நங் கடவுளே ஆ! ஆ! நமக்கு மருகனாகின்ற தொரு சிறப்பினையடைந்தே மல்லமோ! கவலையை விடுக! கள்ளுண்டு இனிய உணவினையுண்டு பேரணிகலன்களைப் பூண்டு மகிழ்ந்திருப்பாயாக என்று கூறி ஆற்றுவித்துச் செவிலிமுதலிய ஏனையோர் பிரிவாற்றாமைத் துயரத்தையும் அகற்றினன்.