| | செம்மலை மணத்திற் காணத் தேவரும் யாரும் போந்தார் | | | கைம்மலை யுலம்பச் சிங்கக் கணஞ்செவி யோர்ந்து செல்லும் | | | அம்மலை வருக வென்னா வடைவினில் வரைந்து ளிட்டான் | | | விம்மலை யுடைய வோங்கல் விழுப்பொருள் சிலத ருய்த்தார். |
(இ - ள்.) தலைவனாகிய முருகவேளைத் திருமணப் போழ்திற் கண்டு மகிழும் பொருட்டு தேவரும் பிறரும் வந்துள்ளனர். யானை பிளிறாநிற்ப அவ்வொலியினைச் சிங்கக் கூட்டம் செவியாலோர்த்துச் செல்லுதற்கிடமான அத்திருத்தணிகைமலைக்கு எல்லோரும் வருக என்று முறையே எழுதிவிட்டனர். அவ்வளவானே அவ்வரசரின் பணியாளர் பின்கூறப்படும் வியப்பினைத் தருதலுடைய மலையின்கட்படுஞ் சிறந்த பொருள்களைக் கொணர்ந்தனர். (வி - ம்.) செம்மல் - முருகன். கைம்மலை - யானை. அம்மலை - அத்தணிகைமலை. விம்மல் - வியப்பு. சிலதர் - பணியாளர். (79) வேறு | | கோழரை யகிலின் குறடுசந் தனவண் குறடுகுங் கிலியங்கப் பூரம் | | | கேழில வங்கங் குங்கும மேலங் கிளர்மணப் பச்சிலை மஞ்சள் | | | வாழிகத் தூரி புழுகுதேன் வேரன் மணிவரை யகழ்ந்துகொள் வயிரம் | | | வேழவேண் மருப்பு மருப்புகு முத்தம் வேங்கையி னுகிர்மயிர் பீலி. |
(இ - ள்.) கொழுகொழுப்பான அடிப்பகுதியையுடைய அகிலின் கட்டை, சந்தனமரத்தின் வளமுடைய கட்டை, குங்குலியம், கருப்பூரம் நிறமிக்க இலவங்கம், ஏலம், மணங்கமழாநின்ற பச்சிலை, மஞ்சள், கத்தூரி, புழுகு, தேன், மூங்கில், அழகிய கலையை அகழ்ந்தெடா நின்ற வயிரமணி, யானையினது வெள்ளிய கொம்பு, அக் கொம்பினின்றும் வீழ்ந்த முத்து, புலிநகம், மயிலின்றோகை. (வி - ம்.) கோழரை - கொழுகொழுப்பான அடிமரம். குறடு - கட்டை. கேழ் - நிறம். வாழி : அசை. வேரல் - மூங்கில். (80) | | சாமரை வெதிர்நெல் லைவனங்குற்ற தவளமெல் லரிசிசெந் தினைபல் | | | காமரு கனிகள் கிழங்குபல் யூகங் கவரிகத் தூரிமா புழுகு | | | மாமத வேழம் பிடிகள பங்கண் மயில்கிளி பூவைமென் புறாக்கள் | | | ஆமவை பிறவுங் கண்டனன் மகிழ்ந்தா னவையெலாங் கொடுபுறப்பட்டான். |
(இ - ள்.) கவரிமான் மயிர்க்கற்றையும் மூங்கில் நெல்லையும் ஐவன நெல்லையும் குற்றிய வெண்மையான மெல்லிய அரிசியும், சிவந்த தினையும், பலவகையான விரும்பத்தகுந்த கனிகளும், கிழங்குகளும், பலவாகிய குரங்குகளும், கவரிமானும், கத்தூரிமானும், புழுகுபூனையும், மதமொழுக்கும் களிற்றுயானையும், பிடியானையும், யானைக்கன்றுகளும், மயிலும், கிளியும், நாகணவாய்ப்புட்களும், மெல்லிய புறாக்களும், இன்னும் மலையிலே உண்டாகும் இன்னோரன்ன பிறவற்றையும் கண்டு |