| வேந்தன் மிகமகிழ்ந்து அவையனைத்தையும் உடன்கொண்டு புறப்பட்டனன். (வி - ம்.) வெதிர் - மூங்கில். ஐவனநெல் - மலை நெல். யூகம் - கருங்குரங்கு. களபம் - யானைக்கன்று. (81) | | பாங்கியர் பாங்கி செவிலிநற் றாயும் பரிவுறு தன்னையர் பலரும் | | | ஓங்கிய நகரும் பரிசனத் தவரு முவாக்கட லெனப்புடை சூழ | | | வீங்கொலி வள்வார்த் தொண்டகந் துவைப்ப வெள்வளை வயிர்பல | | | [நரலத் | | | தூங்குசெந் நாவின் ஞாளிபின் றொடரத் தொடுகழ லொடும்படர்ந் | | | [தடுத்தார். |
(இ - ள்.) ஆயமகளிரும், உசாத்துணைத் தோழியும், செவிலித் தாயரும், நற்றாயும், அன்புறாநின்ற தமையன்மாரும் தமக்கைமாரும் பிறரும் உயர்ந்த நகரமாக்களும் குற்றேவன்மாக்களும் நிறைமதிநாட் கடலெனக் கிளர்ந்து புடைசூழ்ந்து வாராநிற்ப பேரொலியையும் பெரிய வார்க்கட்டினையுமுடைய தொண்டகப்பறை முழங்க, வெள்ளிய சங்கங்களும் கொம்புகளும் முழங்கத் தொங்காநின்ற சிவந்த நாவினையுடைய நாய்கள் பின்தொடர்ந்து வர, வேடமன்னனும் பிறவேடரும் கட்டிய மறக்கழலோடும் சென்று திருத்தணிகைமலையை எய்தினர். (வி - ம்.) தன்னையர் - தமையன்மார். பரிசனம் - குற்றேவலர். தொண்டகம் - குறிஞ்சிப்பறை. ஞாளி - நாய். (82) | | முடங்கல்சென் றறிந்த குன்றவர் யாரு | | | முகிழ்பெரு மகிழ்ச்சியி னடைந்தார் | | | இடங்கெட விறுத்த வுருத்திரர் முதலோர் | | | யாவரு மேகநா யகனைக் | | | குடங்கையின் மலர்தூய் வணங்கினர் கருணை | | | கொண்டபின் றத்தமி லுயர்ந்தோர்க் | | | கடங்கினர் வழிபட் டஞ்சலி யளித்தங் | | | களவளா யிருந்தன ராக. |
(இ - ள்.) இனித் திருமணமுடங்கல் சென்றமையாலே உணர்ந்த குன்றவர் எல்லோரும் தோன்றாநின்ற பேருவகையாலே திருத்தணிகை மலையினை அடைந்தனர். அத்திருத்தணிகையின்கண் இடமில்லையாம்படி ஆண்டுவந்து தங்கிய உருத்திரரை உள்ளிட்டோர் அனைவரும் தனிமுதல் வனாகிய சிவபெருமானை, அகங்கையின்கண் உள்ள மலர்தூவி வணங்கினர். அப்பெருமானுடைய திருவருளைப் பெற்றபின்னர், அவரவரும் தமக்கு உயர்ந்தோர்களுக்கு அடங்கி வழிபாடு செய்து கும்பிட்டு அவ்விடத்தே அளவளாவியிருப்பாராக. (வி - ம்.) ஏகநாயகன் - சிவன். அஞ்சலி - வணக்கம். (83) |