| (வி - ம்.) இழுது - நெய். கழைப்புனல் - கருப்பஞ்சாறு. பூசுபு - பூசி. (99) | | குங்குமக் களிவிராய்க் குரும ணித்திரள் | | | எங்கணு ஞெமிர்ந்தொளி யிணர்த்த வீதிகள் | | | பொங்குபொற் றகட்டிடைப் பொருத்திப் பன்மணி | | | அங்குறப் படுத்ததோ ரழகு காட்டுமே. |
(இ - ள்.) குங்குமக் குழம்பு கலக்கப்பட்டு நிறமுடைய மணித்திரள் எவ்விடத்தும் அழுத்தப்பட்டு ஒளியுடைய பூங்கொத்துகளையும் உடையவாகிய வீதிகள், ஒளிமிகும் பொன்தகட்டின்மேல் பல்வேறு மணிகளை அழுத்தி முளைபோன்று தோன்றச்செய்ததோடு அழகினை யுடையவாயின. (வி - ம்.) களி - குழம்பு. குரு - நிறம். இணர் - பூங்கொத்து. அங்குரப்படுத்தல் - முளையிடுதல். (100) | | சிந்துபொற் சுண்ணமென் றென்ற லுந்துபு | | | கந்தரக் கணமெலாந் தூர்த்த வோதையின் | | | வெந்திறன் மிருகங்கள் வெரீஇப்பெ யர்ந்தன | | | வந்துமீட் டுறாவகை வாய டைத்தென. |
(இ - ள்.) அந்நகரத்தே உண்டான ஆரவாரத்தானே வெவ்விய ஆற்றலுடைய சிங்கம் புலி முதலிய வல்விலங்குகள் அஞ்சி ஓடிப் போனவை, மீண்டும் வராதபடி, வாயிலை அடைத்தாற்போன்று சிந்தாநின்ற பொற் சுண்ணங்களை இளந்தென்றற் காற்றுத் தள்ளிக்கொண்டு போய்க் குகைகளை எல்லாம் தூர்த்தது. (வி - ம்.) உந்துபு - தள்ளி. கந்தரம் - குகை. வெரீஇ - வெருவி ; அஞ்சி. பெயர்ந்தன - பெயர். (101) | | பொன்மலை யரதனப் பொருப்பு நீன்மணித் | | | தென்மலை யெனவொரு சிறப்புப் பேர்பெறும் | | | நன்மலைக் குலமெலா நாணப் பொன்னுமிழ் | | | பன்மணிச் சிலம்பெனப் பறம்பு நின்றதே. |
(இ - ள்.) பொன்மலை என்றும் மணிமலை என்றும் நீலமணித்தென் மலை என்றும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சிறப்புப் பெயரே பெற்றுள்ள நல்ல மலைகள் எல்லாம் நாணும்படி இத்திருத்தணிகைமலை பொன் சொரியும் பன்மணிமலை யென்று உலகோர் பாராட்ட வீறுடன் நின்றது. (வி - ம்.) நீன்மணி - நீலமணி. நீன்மணித் தென்மலை என்றது - நீலகிரியை. சிலம்புபறம்பு என்பன மலை என்னும் பொருளன. (102) | | உக்கதே வர்கண்முடி யொளிர்பன் மாமணி | | | மக்கடாட் படவொளி மழுங்க வன்னவர் |
|