பக்கம் எண் :

வள்ளிநாயகி திருமணப் படலம்1295

 தொக்கதா ருகுமதுத் துவர வாரிப்போய்
 மைக்கடற் படுத்தது மரீஇய கேண்மையான்.

(இ - ள்.) தேவர்களுடைய முடியில் ஒளிராநின்ற பலவாகிய சிறந்த மணிகளுள் வைத்து உதிர்ந்தவை மாந்தர் அடிகளிலே மிதிபடுதலானே ஒளிமழுங்க அத்தேவருடனே கூடிய ஐந்தருக்களும் சிந்திய தேன் அவற்றை எஞ்சாமல் வரன்றிக்கொண்டுபோய் அத்தேவரோடு உறவுண்மை கருதிக் கரிய கடலிலேயிட்டுத் தூய்மை செய்தது.

முடியினின்றும் உக்க மணி என்க. தாரு - ஐந்தருக்கள். மரீஇய - மருவிய.

(103)

 இவரிழைக் குப்பைகுன் றிழுது பாறயிர்
 தவழ்வகா னாறுகு சாந்து சேதகம்
 அவிர்மணிச் சுண்ணமெல் லயிர்ப்பி றக்கமாய்
 நவமணி வீதிநா னிலமுங் காட்டுமே.

(இ - ள்.) உயர்ந்த அணிகலக் குவியல்கள் குன்றுகளாகவும், நெய் பால் தயிர் முதலிய ஒழுகுவன காட்டாறாகவும், சிந்திய சந்தனஞ் சேறாகவும், விளங்காநின்ற மணிச்சுண்ணம் மெல்லிய மணற் குன்றுகளாகவும் தோன்றுதலானே ஒன்பதுவகை மணிகளையுமுடைய வீதிகள் தம்பால் குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் என்னும் நான்கு வகைப்பட்ட நிலங்களின் வளத்தையெல்லாம் காட்டுவனவாயின.

(வி - ம்.) குன்று குறிஞ்சிவளம். கானாறு - முல்லைவளம், சேறு - மருதவளம். மணற்பிறக்கம் - நெய்தல். அயிர் - மணல்.

(104)

 பொன்னினு மணியினும் பொற்பச் செய்தணிந்
 தின்னகை மாந்தரா ரிகந்த தாமரை
 மின்னகு குவளையுஞ் சாந்தும் வேரியும்
 துன்னிய மறுகுக ளோடை தோற்றுமே.

(இ - ள்.) இனிய முறுவலையுடைய மகளிர் பொன்னானும் மணியினானும் பொலிவுறச் செய்தணிந்து பின் வெறுத்து நீத்த பொற்றாமரை மலரும் மின்போன்று விளங்குஞ் செங்கழுநீர் மலரும் சந்தனக் குழம்பும் இருவேரியும் செறிந்துகிடக்கின்ற வீதிகள் நீரோடைபோன்று காணப்பட்டன.

(வி - ம்.) வேரி - வெட்டிவேர். இது பாசிக்குவமை.

(105)

 அரத்தகச் சுவடுமிக் கார்ந்து குங்குமம்
 பரத்தலின் வச்சிரம் பதித்த மேனிலம்
 வரத்தின ரூற்றினை மாழ்கித் தன்னுருக்
 கரத்தல்செய் மணிப்படாம் போர்த்த காட்சித்தே.

(இ - ள்.) மகளிருடைய செம்பஞ்சுக் குழம்பூட்டப் பெற்ற அடிச்சுவடு மிகவும் பொருந்தப்பட்டு குங்குமமும் யாண்டும் பரவி