| யிருத்தலான் வேல் நடப்பட்ட மேனிலை மாடம் தேவர் தீண்டுதலை அஞ்சித் தனது உருவத்தை மறைக்கின்றதொரு அழகிய போர்வையினைப் போர்த்துக் கொண்டாற் போன்ற தோற்ற முடைத்தாயிற்று. (வி - ம்.) அரத்தகம் - அலத்தகம். மேனிலம் - மேன்மாடம். வரத்தினர் - தேவர். ஊற்று - தொடுதலாலுண்டாகும் உணர்ச்சி. (106) | | வேற்றுரு வாயவண் விரவெண் வேலையும் | | | ஆற்றுமேழ் மேகமு மழகு கண்டெனச் | | | சாற்றரு மோகையிற் றழங்கி னாலெனத் | | | தோற்றும்பன் மறைகளின் நுதிகண் மிக்கவே. |
(இ - ள்.) திருமணங்காண்டற்கு வேற்றுருவங்கொண்டு அவ்விடத்தே வந்து கலந்த புறக்கடலோடு எட்டாகிய கடல்களும் உலகினை ஓம்புதல் செய்யாநின்ற ஏழுமேகங்களும் அந்நகரத்தின் பேரழகினைக் கண்டனவாகலின் கூறுதற்கியலாத பேருவகைகொண்டு ஒருங்கே ஆரவாரித்தாற் போன்று இறைவனாலியற்றப்பட்ட பலவாகிய வேத வாழ்த்தொலிகள் முழங்கின. (வி - ம்.) புறக்கடலையுங் கூட்டி எண்வேலையும் என்றார். தழங்குதல் - ஆரவாரித்தல். (107) | | நேமிவண் கிரிமுத னெடிய குன்றெலாம் | | | தாமிவர் களிப்பினாற் றருக்கி னாலெனப் | | | போமிடந் தொறுந்தொழில் புரியு மீளுறும் | | | காமரு விமானமுங் கணிப்பி றேருமே. |
(இ - ள்.) விரும்புதற்குக் காரணமான வானவூர்திகளும் எண்ணிறந்த தேர்களும், சக்கரவாளமலை முதலிய உயரிய மலைகள் அனைத்தும் தாம் திருமணங்காண்டற்கு ஆங்குற்ற மகிழ்ச்சியாகவே தருக்குற்றுத் திரிந்தாற்போன்று யாண்டுந் திரியும் இடந்தொறும் தத்தமக்குரிய தொழிலைச் செய்யாநிற்கும் ; மீளாநிற்கும். (வி - ம்.) நேமிகிரி - சக்கரவாளமலை. இவர்தல் - வருதல். உயர்ந்த எனினுமாம். (108) | | நிறுத்திய நிலைநெடுந் தேர்க ளெண்ணில | | | கறுத்தொரு வரைதுளை கண்ட வண்ணலை | | | உறுத்துளக் குகையிடை யோகு ழந்துமன் | | | மறுத்தப நின்றநல் வரைகள் போன்றவே. |
(இ - ள்.) அந்நகரத்தே நிலையாக நிறுத்தப்பட்ட எண்ணிலாத நிலைத்தேர்கள், ஒருமலையைச் சினந்து துளைசெய்த முருகப்பெருமானைத் தம்குற்றந் தீர்தற் பொருட்டுத் தமதுளமாகிய குகையிலே வைத்து யோகமியற்றி நின்ற வேறு நல்ல மலைகளைப் போன்று தோன்றின. |