| | வேயின தோளியோர் பாக மேவுறக் | | | காயிலைச் சூற்படைக் கடவு ணாயகன் | | | பாயின வுருத்திரர் பாங்கர்ச் சூழ்தர | | | ஆயிடைப் புகுந்தகன் றவிசின் வைகினான். |
(இ - ள்.) மூங்கிலையொத்த தோளையுடைய உமையன்னையார் ஒருபகுதியிலே வரவும் சினக்கின்ற இலையினையுடைய சூலப்படையை யுடைய இறைவர்க்கிறைவனாகிய சிவபெருமான் பரவிய உருத்திரர்கள் தன்னைப் புடைசூழ்ந்து வாராநிற்பவும் அத்திருமண மண்டபத்திலே புகுந்து ஓர் அகன்ற இருக்கையின் மிசை வீற்றிருந்தருளினான். (வி - ம்.) காயிலைச்சூல் : வினைத்தொகை. சூல் - சூலம். (113) வேறு | | இந்திரனு மறுவிகந்த விமையவரு | | | மேவல்வினை யியற்றா நிற்பக் | | | கொந்தொளிய கவுத்துவநின் றழகெறிக்கும் | | | வரைமார்பன் குமரற் றாழாச் | | | சுந்தரப்பன் மணிகுயின்ற மண்டபத்திற் | | | றுளும்புமொளித் தவிசி னேற்றி | | | அந்தரகங் கையை முதலாப் பலவுமனுப் | | | புகன்றுமுறை யாட்டி னானால். |
(இ - ள்.) மிகுந்த ஒளியினையுடைய கவுத்துவமணிமாலை நிலை பெற்று அழகுதிகழாநிற்கும் மலைபோன்ற மார்பினையுடைய திருமால் இந்திரனும் குற்றமற்ற ஏனைத்தேவர்களும் தனக்குக் குற்றேவல் செய்யா நிற்ப முருகவேளை வணங்கி அழகிய பலவகை மணிகளும் பதிக்கப்பட்ட தொரு மண்டபத்தின்கண் ஒளிமிக்க ஓர் அணையிலே எழுந்தருளச்செய்து வானகங்கை முதலிய பல புண்ணிய நீர்களானும் மந்திரமோதி நூன்முறைப்படி திருமுழுக்காட்டினன். (வி - ம்.) மறு - குற்றம். கொந்து - பெருமை. கவுத்துவம் - திருப்பாற்கடலிற் பிறந்ததொரு தெய்வமணி. மார்பன் - திருமால். மனு - மந்திரம். (114) | | செழுந்துபடு மரதனச்செம் மணிமலையிற் | | | செறிந்தபைங்கார் சென்று சாலப் | | | பொழிந்தபின்றை மஞ்சுதவழ்ந் தாலெனவெண் | | | டூசுகொடு புலர்த்திப் போக்கி | | | எழுந்தொளிருங் கிரணமணி யரைநாணுங் | | | கோவணமு மிலகு பட்டும் | | | தழுந்தரத்த வணிந்துநறுஞ் சந்தனச்செஞ் | | | சேறுருவிற் றயங்கச் சாத்தி. |
|