பக்கம் எண் :

வள்ளிநாயகி திருமணப் படலம்1299

(இ - ள்.) செழுமையுடைய மணியாகிய மாணிக்க மலைமிசை நெருங்கிய முகில் சென்று மிகவும் நீரைப் பொழிந்த பின்னர் வெண்முகில் தவழ்ந்தாற் போன்று நீராட்டியபின்னர் வெள்ளிய ஆடையாலே ஈரம்புலர்த்தி அகற்றி, உயர்ந்து ஒளிவீசும் சுடரையுடைய மணியாலாய அரைநாணும் கோவணமும் விளங்காநின்ற பட்டும் பிறவுமாகிய பொருத்தமானவற்றை அணிந்து பின்னர் திருமேனியில் சந்தனக் குழம்பினை விளங்கும்படி பூசி.

(வி - ம்.) செழுந்து - செழுமை. செம்மணி - மாணிக்கம். சால - மிக. தூசு - துகில். கிரணம் - சுடர். தழும் - தழுவும்

(115)

 தாவில்பல மறைகளுஞ்சுப் பிரமணிய
           னெனவெடுத்துச் சாற்று மாறு
 மூவுலகும் பெறலரிய முரஞ்சொளிய
           விம்மணியாற் போலு மென்னத்
 தேவர்களு மருட்கைகொடு நோக்கநவ
           மணியிமைக்குந் தெய்வ மோலி
 பூவமலு நறுங்குஞ்சி கைசெய்த
           திருமுடியிற் பொற்பச் சூட்டி.

(இ - ள்.) குற்றமற்ற பல மறைகளும் இம்முருகனைச் சுப்பிரமணியன் என்று உயர்த்துக் கூறுதற்குக் காரணம், மூன்றுலகத்தும் பெறுதற்கரிய முதிர்ந்த பேரொளியையுடையவாகிய இம்மணிகளை இவன் உடையனாதலே போலும் என்று தேவர்களும் வியந்து நோக்கக் காரணமான ஒன்பதுவகை மணிகளும் ஒளிர்கின்றதொரு கடவுட்டன்மையுடைய முடியணிகலனை, மலர்செறிந்த நறிய தலைமயிரை ஒப்பனை செய்த பின்னர்த் தலைமிசைப் பொலிவுண்டாகச் சூட்டி.

(வி - ம்.) தா - குற்றம். சுப்பிரமணியன் - பேரொளியையுடைய மணிகளையுடையோன். முரஞ்சு - முதிர்வு. தேவர்களும் - உம்மை உயர்வு சிறப்பு.

(116)

 பாண்டரங்க னுதற்கிளைத்த பரவையொளி
           விழித்தழற்பல் புலிங்கம் போலாம்
 ஈண்டிலங்கு மணியுருவா யெழுந்துலகந்
           தழன்மகனென் றியம்பப் பட்ட
 ஆண்டகைமைக் கங்கிவிழி மிகையாமென்
           றணியாத நூதலின் மாதோ
 காண்டகுமக் கனல்விழிபோற் கதிர்க்குமர
           தனவோடை கவின வீக்கி.

(இ - ள்.) பாண்டரங்கக் கூத்தாடுஞ் சிவபெருமானுடைய நெற்றியிலே தோன்றிய பரப்புடைய ஒளியுடைய கண்ணாகிய தீயின்கண் சிதறிய பலவாகிய பொறிகளே இவ்விடத்தே திகழும் செம்மணித்