| திருமேனியுடைய முருகப்பெருமானாக எழுந்தருளி நெருப்புமகன் என்றும் பெயர்பெற்றன. ஆகலின் இவ்வாண்டகையாகிய முருகப்பெருமானுக்கு நெருப்புக்கண் மிகையாமென்ற கருத்தாலே அணியப்படாத திருநெற்றி மிசை, காண்டற்கினிய அந்நெருப்புக் கண்போன்று ஒளிரும் மணியாலாய நெற்றிப்பட்டத்தை அழகுறக் கட்டி. (வி - ம்.) பாண்டரங்கம் - சிவபெருமான் ஆடிய திருக்கூத்து. பரவை - பரப்பு. புலிங்கம் - தீப்பொறி. (117) | | காமவேண் மணிக்கவிகை மருங்கடுத்த | | | கொடிமகரங் கடுத்துங் கஞ்சப் | | | பூமரிஇப் புறங்கிடந்த மகரமொடு | | | மலைத்துமெழில் பூப்ப முன்னர் | | | நாமநீர் நறும்பொய்கை யிருந்ததற்கோ | | | ரடையாள நண்ணிற் றென்ன | | | ஏமவா னுலகேத்து மணிமகரக் | | | குழைசெவியி னிலங்கத் தூக்கி. |
(இ - ள்.) காமவேளினுடைய அழகிய குடையாகிய திங்கண் மண்டிலத்தினயலே பொருந்திய அவனுடைய கொடியாகிய மகர மீனைப் போன்றும், தாமரை மலரைப் பொருந்தி அதன் அயலே கிடந்த மகரமீனைப்போன்றும் அழகு பொலியாநிற்பத் தொடக்கத்தே அஞ்சுதற்குக் காரணமான நீர்ப் பெருக்கினையுடைய நறிய சரவணப் பொய்கையிலே தங்கியதற்கு ஓர் அடையாளம் பொருந்திற்று என்று கூறும் படி இன்பமிக்க வானவர் பாராட்டும் மணியாலியன்ற மகரக் குழையினைத் திருச்செவிகளிலே திகழும்படி அணிந்து. (வி - ம்.) காமவேள் கவிகை திங்கள். கஞ்சப்பூ - தாமரைமலர், இவையிரண்டும் திருமுகத்திற்குவமை. நாமம் - அச்சம். (118) | | மண்டியதன் பெருங்கீர்த்தி வயங்குமதி | | | யெனவண்ட வகுப்பு முற்றும் | | | கொண்டொளிர்வ தாகரமற் றிவனேயென் | | | றுலகமெலாங் குறிப்ப மும்மைப் | | | புண்டரமென் றவிர்நுதலிற் செங்கதிரென் | | | றண்டமெலாம் புகர்கால் சீக்கும் | | | மிண்டுபிர தாபமுமவ் வாறடுத்தா | | | லெனத்திலக மிளிரத் தைத்து. |
(இ - ள்.) இறைவனாற் படைக்கப்பட்ட மேல் கீழ் நடுவென்னும் மூன்று திறத்தவாகிய வுலகமெல்லாம் தன்னுடைய (முருகவேளுடைய) அளியாலே பெருகிய புகழ் திங்கள் மண்டிலமாகப் பரிணமித்துத் தன்னுளடங்கக் கொண்டு திகழா நிற்பது ; அத்திங்கள் ஒளிக்கு உறைவிடம் |