| இவனே என்று குறித்தற் பொருட்டு அவன் நுதலில் மூன்று கோடுகள் விளங்குகின்றன என்று உட்கொண்டு, சிவந்த கதிரவனாகப் பரிணமித்து எல்லா அண்டங்களையும் மறைக்கு மிருளை அகற்றாநின்ற செறிந்த தெறற் புகழும் அங்ஙனமே நுதலின்கண் ஓரடையாளமாக வந்துற்றாற் போன்று அந்நுதலின்கண் அழகிய திலகத்தினைத் திகழும் படியிட்டு. (வி - ம்.) முருகப் பெருமானுடைய அளிப்புகழ் மூன்றுலகத்துந் திங்களாகப் பரிணமித்து விளக்குதற்கு அடையாளம் அவன் நெற்றியிலுள்ள முப்புண்டரம் என்றவாறு. செங்கதிர் அவனுடைய தெறற் புகழ். இவற்றிற்கெல்லாம் உறைவிடம் அப்பெருமானே என்பது கருத்து. தெறற்புகழுக்கு அடையாள மிட்டாற் போன்று திலகமிட்டார் என்றபடி. தைத்து - இட்டு. (119) | | சேந்துமதர்த் தரிபரந்து குழைகிழிக்கு | | | மிருமாதர் செழுங்கண் வாய்வைத் | | | தேந்துநலன் முழுதுமினி துண்ணவரை | | | தலினேனை மாத ரங்குப் | | | போந்தவர்கண் புகுந்துழக்கி மிச்சில்படுத் | | | தாவரணம் போலத் தோளில் | | | காந்துமணி யங்கதமும் வரைமார்பிற் | | | பலகலனுங் கஞலப் பூட்டி. |
(இ - ள்.) வள்ளிநாயகியாரும் தேவயானையாருமாகிய இரண்டு மாதரும் சிவந்து மதர்த்து செவ்வரி யோடப்பெற்று குழையைக் கிழிக்கும்படி நீண்டுள்ள செழுமையுடைய தமது கண்களாகிய வாயை வைத்து உயர்ந்த அழகாகிய அமிழ்தம் முழுவதும் உண்டற்கு வரைந்து கோடலின் அங்கு வந்த ஏனைய மகளிர்கள் கண்கள் பொருந்தி நுகர்ந்து மிச்சிலாக்கி விடாமைக்கு இடப்பட்ட கவசங்கள் போன்று தோளின் கண் ஒளிரும் மணியிழைத்த அங்கதமென்னும் அணிகலனையும் உத்தம இலக்கணமாகிய கோடுகளையுடைய மார்பின்கண் பலவாகிய அணிகலன்களையும் பூட்டி. (வி - ம்.) மதர்த்து - களிப்புற்று. இருமாதர் - வள்ளியும் தேவசேனையும் அங்குப் போந்த ஏனைமாதர் என்க. அரணம் - கவசம். (120) | | தன்னுருவிற் றொழிற்கும்வினை முதறானே | | | யெனுந்தன்மை சகங்க டெள்ளத் | | | தன்னுருவிற் றொழிற்கருவி தானாகு | | | மணிக்கடகந் தடங்கை யேற்றித் | | | தன்னுருவி னிளையனுமாய் முதுக்குறைவிற் | | | பெரியனுமாந் தனையே யொக்கும் | | | தன்னுருவிற் சிறுத்துவிலை வரம்பிகந்த | | | மணியாழி ததையக் கோத்து. |
|