| (வி - ம்.) கொங்கு - மணம், ஆசி - வாழ்த்து. எண்வகை மங்கலம். கவரி, நிறைகுடம், கண்ணாடி, தோட்டி, முரசு, விளக்கு, பதாகை, இணைக்கயல் என்பன. (123) | | பஞ்சுநெய் நாவியும் பளிதமு நீவிய தீஞ்சுடர் | | | விஞ்சுபொற் படலிகை யேந்திவிண் மாதரார் மென்மெல | | | அஞ்சிலம் படிபெயர்த் திடுகிடை துவளமுன் னண்மினார் | | | மஞ்சனை மரபுளி காட்டினா ரீட்டினார் மாதவம். |
(இ - ள்.) மிக்கதவப்பயன் உண்மையால் தேவமகளிர் பஞ்சும் நெய்யும் புழுகும் கருப்பூரமும் தடவிய இனிய விளக்குச் சுடரையுடைய உயர்ந்த பொற்பூந்தட்டினை ஏந்திக்கொண்டு மெல்ல மெல்ல அழகிய சிலம்பணிந்த தம்அடிகளைப் பெயர்த்திட்டுச் சிறுத்த இடை யொசிய எம்பெருமான் திருமுன்பு வந்து முறைப்படி காட்டா நின்றனர். (வி - ம்.) பஞ்சு - திரி. நாவி - புழுகு. படலிகை - பொற்பூந்தட்டு. (124) | | வாம்பரி நின்றிழிந் தெம்பிரான் மன்றல்செய் மண்டபத் | | | தோம்புமுன் வாய்தலிற் சேறலும் வேடர்கோ னுரிமையாள் | | | தீம்பயத் தாட்டினாள் சேவடி மாமலர் சூட்டினாள் | | | ஏம்பலுற் றயினிநீர்ச் செஞ்சுடர் சுற்றியிட் டாளரோ. |
(இ - ள்.) எம்பெருமான் தாவாநின்ற குதிரையினின்று மிறங்கி காவல் புரியப்படும் திருமண மண்டபத்துத் தலைவாயிற்குச் சென்ற துணையானே வேடமன்னனின் மனைவி எம்பெருமானுடைய சேவடிகளை இனிய பாலாற் கழுவிச் சிறந்த மலர்களைச்சூட்டி விம்மிதமெய்தி அயினி நீரும் செவ்விய விளக்குஞ் சுற்றினாள். (வி - ம்.) வாம் - வாவும். மன்றல் - திருமணம். உரிமை - மனைவி. பயம் - பால். ஏம்பல் - விம்மிதம். (125) | | அகவயிற் சென்றன னம்மையோ டப்பரைத் தாழ்ந்தனன் | | | நகுமுகத் திருமுது குரவர்த மேவலி னவமணித் | | | தகுபொலந் தவிசிடை வைகினான் முன்னரே சார்ங்கனால் | | | திகழ்மலர் மாதராள் வள்ளியைச் சேர்ந்திது செய்தனள். |
(இ - ள்.) பின்னர்த் திருமண மண்டபத்துள்ளே ஆண்டு வீற்றிருந்த இறைவியாரையும் இறைவனாரையும் வணங்கினன். மலர்ந்த முகத்தையுடைய அம்மையப்ப ரிருவருடைய திருப்பணியை மேற்கொண்டு, மணிகளழுத்திய பொன்னணை மிசை அமர்ந்தருளினான். இனி முன்னரே திருமால் ஏவுதலினாலே விளங்குகின்ற மலரின்கண் ணுறையும் திருமகள் வள்ளி நாயகியாரை அணுகிப் (பின்வருமாறு) ஒப்பனை செய்தனள். (வி - ம்.) இருமுதுகுரவர் - தாயுந்தந்தையும். சார்ங்கன் - திருமால். (126) |