பக்கம் எண் :

1306தணிகைப் புராணம்

(இ - ள்.) முழுமையுடைத்தாகிய அழகின்திறத்திலே நோன்பு செய்த தலைமைத் தன்மையிற் றன்னைக் கீழ்ப்படுத்திய குற்ற மில்லாதவளாகிய வள்ளிநாயகியாரின் தலைமிசை தன்னைப்போன்று இயற்றப்பட்ட சீதேவி என்னும் தலைக்கோலத்தையும், அதனைத் தொடர்ந்தமையாலே இழுக்குற்ற பிறை வடிவிற்றாய அணியினையும் மயில் வடிவிற்றாகிய அணியினையும் வலம்புரிவடி விற்றாகிய அணியினையும் சூட்டாளாய் வேறாகத் தனித்ததொரு ஒளியொழுகும் பிறையினையும் சிறந்த மயிலினையும் பொருத்தமாதலை ஆராய்ந்து அணிந்தனள்.

(வி - ம்.) திருமகளே அழகிற் றலைசிறந்தாள் என்னும்படி தான் நோற்றுப் பெற்ற முதன்மையை வள்ளிநாயகியார் கீழ்ப்படுத்தி விட்டனர் என்றவாறு.

தெய்வவுத்தி. திருமகள் வடிவிற்றாகச் செய்ததொரு சீதேவி என்னும் தலைக்கோலம். தன்னுருவிற்றாகிய அவ்வணி வள்ளியின் தலையிலிருத்தலாகா தென்னுங் கருத்தால் அதனையும் அதைத் தொடர்ந்தமையானே பிறை மயில் வலம்புரி என்னுமிவற்றின் வடிவாகிய அணிகளையும் அகற்றித் தனிப்பிறை மயில் முதலிய அணிகலன்களை அணிந்தனள் என்பது கருத்து.

(132)

 காரெனக் கிளத்தற் கேற்பக் கண்ணுதல் சடில வாழ்க்கைச்
 சீரிய பிறையுங் கானஞ் செப்புதற் கேற்பச் செவ்வேள்
 போரியல் கொடியின் வாழ்க்கைப் பொறிமயிற் போத்துஞ் சேர்த்தாள்
 வாரியன் மணிப்பொற் சுட்டி தாழமண் ணுறுத்தா ளன்றே.

(இ - ள்.) நிறவொப்புமையால் கூந்தலைக் காரெனக் கூறும் கட்டுரைக்குப் பொருந்துமாறு, கண்ணுதல் எனப்படும் திருக்கருத்தளவானே திருத்தொழில் ஐந்தினையும் நிகழ்த்துவிக்கும் கண்ணுதற் பெருங் கடவுளின் திருமுடியின்கண் வாழும் வளஞ்சார் இளம்பிறை என்னும் அணியினையும், நெருக்கமும் மிகுதியும் ஆகிய ஒப்புமையால் காடெனவுரைக்கும் உரைக்கும் பொருந்துமாறு செவ்வேளின் ஒப்பில்லாத கடந்தடு போரின்கண் கொடியில் காணப்படும் புள்ளிக் கண்களையுடைய ஆண்மயிலென்னும் அணியினையும் உரிய இடங்களிற் சேர்த்தனள். நீண்டு மடிந்து தொங்குகின்ற மணியழுத்தி யுள்ள அழகிய பொற்சுட்டியினை உச்சியினின்றும் ஒழுகவிட்டு நெற்றியின் கண் நாலும்படி அணிவித்தாள். இவ்வாறாக ஒப்பனை செய்தனள்.

(133)

 இளமழை யூடு போந்தங் கிலங்குமோ ரரவ நக்கும்
 பிளவியன் மதியே போலும் பிறங்கொளிச் சுட்டி தாழா
 உளர்நறு நுதலி னோட வுருகுபொற் பட்டம் யாத்து
 வளவிய நாகங் கான்ற மணியெனத் திலக மிட்டாள்.

(இ - ள்.) இளமையுடைய முகிலினூடு புகுந்து அவ்விடத்தே ஒரு பாம்பாலே நக்கப்படுகின்ற பிளவுபட்ட திங்களைப்போன்று, விளங்கா நின்ற சுட்டியினை அணிந்து, நுதலின்கண் ஓடவிட்ட அசையா