| நின்ற பொற்பட்டத்தினைக் கட்டி நாகமுமிழ்ந்த வளப்பமுடைய மணி போன்று திகழும்படி திலகந் தீட்டினள். (வி - ம்.) இளமழை - முதிராதமுகில். இது - கூந்தற்குவமை. அரவம் - பின்னலுக்குவமை. தாழா - தாழ்த்து ; அணிந்து. (134) | | பாட்டளித் துளவத் தாரான் பயத்தலி னவன்போன் மைத்தும் | | | சேட்டிளம் பிணைமா னீன்ற செய்தியா லதன்க ணொத்தும் | | | வேட்டுவர் குலத்துச் சார்பா லவர்கைவெஞ்சரத்தின் வைத்தும் | | | காட்டிய விழிக்கு மாதோ கரியமை யெழுதி யிட்டாள். |
(இ - ள்.) இசைபாடாநின்ற வண்டுகள் மொய்க்குந் துளசிமாலை யினையுடைய திருமால் பெற்றமையாலே அவன் நிறம்போன்று கறுத்தும், பெருமையுடைய இளமான் ஈன்ற காரணத்தானே அதன் கண்ணை நிகர்த்தும், வேடர் குடியிலே வளர்ந்தமையானே அவர் கையிலுள்ள வெவ்விய அம்புபோன்று கூர்மைபெற்றும் தோன்றாநின்ற விழிகட்கு மேலும் கரிய மையினையூட்டினள். (வி - ம்.) அளி - வண்டு. மைத்தும் - கறுத்தும். சேடு - பெருமை ; அழகுமாம். வைத்தும் - கூர்த்தும். மாதும், ஓவும் அசைகள். (135) | | நலம்புரிந் தருள வேண்டி நறுமுகை முல்லை மூரற் | | | குலம்புரி பவளக் கோயிற் கொழுமணி வாயில் காவல் | | | வலம்புரி யொருமித் தண்மி வதிந்தென வார்ந்த நாசி | | | வலம்புரி முத்த நான்ற வயங்குபொற் றொடரைக் கோத்தாள். |
(இ - ள்.) அழகு செய்தருளுதற்கு விரும்பி வலம்புரியீன்றதொரு முத்து, நறியமுல்லையரும்பு போன்ற பற்களின் தொகுதியமைந்த பவளம் போன்ற திருவாயாகிய கோயிலினது கொழுவிய மணிமுன்றிலின் கண் அணுகிக் காவல் செய்திருந்தாற் போன்று நீண்டநாசியின்கண் வலம்புரியீன்ற முத்தொன்று தூங்காநின்ற விளங்கிய பொற்றொடரினை அணிந்தாள். (வி - ம்.) நலம் - அழகு ; நன்மையுமாம். முல்லைமுகை மூரல் என்க. பவளக்கோயில் என்றது திருவாயினை. (136) | | பங்கய மலரை வென்ற பாயரி மதர்க்க ணோக்கிச் | | | செங்கய லீது மாந்தித் தேக்கலா மென்று போந்து | | | தங்கிய மகர மென்னத் தரித்தனள் குழைவார் காதில் | | | அங்கது வெகுண்டு தாக்கி யலைப்பநின் றலையு மன்றே. |
(இ - ள்.) தாமரை மலரை அழகால் வென்ற செவ்வரி படர்ந்த மதர்ப்புடைய கண்களை நோக்கிய மகரமீன், இவை செவ்விய கயல்மீன் களாகும். இவற்றைத் தின்று வயிற்றை நிரப்பலாம் என்று கருதிவந்து தங்கினாற்போன்று மகரமீன் வடிவிற்றாய குழையினைச் செவிகளிடத்தே அணிந்தனள். அவ்விடத்தே அக்கயல்மீன்கள் அம்மகர மீன்களைச் சினந்து |