| வந்து தாக்கி வருத்துதலானே அம்மகரமீன்கள் அங்குமிங்கும் அலைந்தாற் போன்று அம்மகரக்குழை செவிகளிலே ஊசலாடின. (வி - ம்.) குழை - மகரக்குழை. அது - அச்செயல். அம்மகரத்தை எனினுமாம். (137) | | வானர மகளிர்க் கெல்லாம் வதுவைசூட் டிடவோ ரங்கை | | | தானமைத் தருளு மையன் றரிக்குமங் கலநாண் டாங்கும் | | | நானவண் களத்துக் கட்டு வடநகை மணிக்காழ் சூழ்ந்தாள் | | | ஆனவொண் ணிதிகள் பாங்க ரருங்கல னுமிழ்ந்த வேபோல். |
(இ - ள்.) அமரர் மகளிர்க்கெல்லாம் வதுவைமாலை சூட்டுதற்கென்று தன் திருக்கைகளுள் ஒன்றனை அமைத்தருளிய எம்பெருமான் பூட்டாநின்ற மங்கலநாண் அணிகலனை ஏற்கும் புழுகுமணக்கும் திருக் கழுத்தின்கண், பாற்கடலிலே தோன்றிய சங்கநிதியும் பதுமநிதியும் தம்மருகே ஒருசேர பெறற்கரிய பேரணிகலனை ஈன்று வைத்தாற் போன்று கட்டுவட மென்னும் ஒளியுடைய மணிகளாலியன்றதொரு அணிகலனைச் சுற்றிக்கட்டினள். (வி - ம்.) வான் அரமகளிர் என்க. "வானரமகளிர்க்கெல்லாம் வதுவை சூட்டிடவோரங்கை தானமைத்தருளுமையன்" என்றது "ஓருகை வானர மகளிர்க்கு வதுவை சூட்ட" என்று நிகழும் திருமுருகாற்றுப்படை (116 - 67) நினைவான் முகிழ்த்ததாம். சங்கநிதி கழுத்திற்கும் ; பதுமநிதி, திருமுகத்திற்கும் உவமைகள் என்க. (138) | | தனையடுத் தவரைத் தன்போற் றகைநலத் துறுத்து வான்போற் | | | கனைகதிர் மணிபொற் காழுங் கடிமலர்த் தொங்கன் மற்றும் | | | புனைவன தாங்கி வல்லாப் புணர்முலைக் கணிசெய் தோங்கும் | | | வனைபுகழ் பணைமென் றோளை வயிரவங் கதம்பூண் பித்தாள். |
(இ - ள்.) தன்னையடுத்தவரைத் தன்னைப்போன்றே தகுதிபெற்ற நன்மையிலே இருத்துகின்ற எம்பெருமானைப்போன்று, செறிந்த கதிரையுடைய மணிமாலைகளையும் பொன்மாலைகளையும் மணமுடைய மலர்மாலைகளையும் இன்னோரன்ன பிற அணிகளையும் தானே ஏற்றுத் தாங்கி இவையிற்றைத் தாங்கமாட்டாத மென்முலைகட்கே அழகு செய்துயரும் வனைந்தாலொத்த புகழுடைய மூங்கிலையொத்த மெல்லிய தோளில் வயிரமணியா லியன்ற அங்கதமென்னும் அணியினைப் பூட்டினாள். (வி - ம்.) தகை - தகுதிப்பாடு. காழ் - வடம். கடி - மணம். வல்லா - மாட்டாத. பணை - மூங்கில். (139) | | புரிமுறுக் கவிழுங் கஞ்சப் பூவினை வாட்டு மங்கை | | | விரிமலர்க் கஞ்ச நண்பன் வெய்தடுத் திரந்து நின்றாங் | | | கெரிமணிக் கடக முன்கை யினவளை செறித்துப் பூட்டித் | | | தெரிமணி யாழி கோத்துச் செறித்தனள் விரல்க டோறும். |
|