பக்கம் எண் :

வள்ளிநாயகி திருமணப் படலம்1311

(இ - ள்.) சிலவாகிய பரல்களையுடைய சிலம்பும் செம்பொன்னாலியன்ற கிண்கிணியுமாகிய அடியணிகலன்கள் காலிற்சிறிய பரட்டினைப் பொருந்தினவாகக் கிடந்து முரலும்படி அணிந்து நீண்டநல்ல அழகுடைய விரல்களை ஒளிவிட்டுமின்னாநின்ற மணிகளழுத்திய விரற்செறி யென்னும் அணிகலனில் அடக்கி, ஒளியுமிழ்கின்ற பட்டாகிய தோக்கையை மேன்மையுற விரித்துடுத்தனள்.

(வி - ம்.) அரி - பரல். பாதசாலம் - அடியணிகலன். புல்லிய - சிறிய. மனா - மணி. செறி - விரற்செறி. தோக்கை - முன்றானை.

(146)

 அலத்தக மெழுதக் கைக்கொண் டம்மல ரடிக ணோக்கி
 நலத்தகு தளிர்க்கை நோக்கி யவற்றொளிர் நகமு நோக்கிக்
 குலத்தகு பவள வாயுங் கூர்மணி நாவு நோக்கி
 நிலத்திடை யிட்டா ளூட்டா நிறத்தொடு நேரா தென்றே.

(இ - ள்.) மேலும் செம்பஞ்சுக் குழம்பினைக் கையிலெடுத்துக் கொண்டு வள்ளிநாயகியாரின் அழகிய மெல்லிய மலர்போன்ற அடிகளைக் கூர்ந்துநோக்கியும் அழகுத் தகுதிபெற்ற தளிர்போன்ற கைகளை நோக்கியும் அக்கைகளில் ஒளிராநின்ற நகங்களை நோக்கியும் உயர்ந்த சாதிப் பவளம்போன்ற திருவாயினை நோக்கியும் கூர்த்த அழகிய நாவினை நோக்கியும் இவ்வுறுப்புக்களின் இயற்கை நிறத்தினை இச்செம்பஞ்சுக் குழம்புநிறம் ஒவ்வாதென்று கருதி நிலத்திடை
உகுத்தாள்.

(வி - ம்.) அடி முதலிய உறுப்புகள் அலத்தக மூட்டப்படுவன. மணி - அழகு. ஊட்டாநிறம் - இயற்கையான நிறம்.

(147)

 பிறர்க்கணி படுக்கு மாற்றா லணியெனும் பெயர வெல்லாம்
 சிறக்குமின் னனையாண் மெய்யிற் சேர்ந்தணி பெற்று முன்னர்
 உறுத்தவப் பெயரி னீங்கா வாயின வொருவர் தம்பால்
 துறுத்திடப் படார்கொ லொண்மை துறுத்தவ ரெவர்க்கு மொண்மை.

(இ - ள்.) உலகினர்யார்க்கும் அறிவு கொளுத்திய ஆசிரியராவார் தாமே மற்றோர் ஆசிரியரால் அறிவு கொளுத்திடப்படுதல் உண்டன்றோ அங்ஙனமே உலகிற் பிறமகளிர்க்கெல்லாம் அழகினையுண்டாக்கு மியல்புடைய காரணத்தானே அணியென்று வழங்கப்பட்ட இவ்வணிகலன் எல்லாம் இப்பொழுது அவ்வழகானே தலைசிறந்த மின்போன்ற வள்ளி நாயகியாரின் உடம்பிலே சேர்ந்தமையாலே தாமே அழகு பெற்றன, எனினும் முன்னர் இட்ட அப்பெயரினின்றும் நீங்காதன வாயின.

(வி - ம்.) மின்னனையாள் - வள்ளியம்மையார். துறுத்துதல் - கொளுவுதல். ஒண்மை ஈண்டு அறிவின்மேனின்றது.

(148)

 செந்திரு நமக்குச் சேமஞ் செய்தவவ் வணிக ளன்றே
 இந்தமான் பிணைக்கொப் பித்தா மீதென்ன மருட்கைத் தம்மா