பக்கம் எண் :

1316தணிகைப் புராணம்

வேறு

 நம்பியென் றியற்பேர் பூண்ட நற்றவ வேட னண்மிப்
 பம்பிய பரமா னந்தன் பயந்தவிர் சதாசி வன்றன்
 வெம்பழல் விழிக்கட் டந்த வேலவற் கென்பால் வந்த
 கொம்பினைக் கொடுத்தே னென்று தன்வழிப் பெயருங் கூறி.

(இ - ள்.) நம்பி என்னும் பெயரைத் தனது இயற்பெயராகப் பூண்டுள்ள நல்ல தவத்தையுடைய வேடர் வேந்தன் சிவபெருமான்பாலணுகித் தன் மரபு முன்னோர் பெயர்களைக் கூறி, யாண்டும் பரவிய மேலான இன்பமானவனும் உயிர்களின் அச்சத்தை அகற்றுகின்ற சதாசிவனும் ஆகிய இறைவன் தனது வெவ்விய நெற்றிக் கண்ணாலே ஈன்றருளிய வேற்படையினையுடைய முருகவேளுக்கு என்பால் திருமகளாய் வந்த பூங்கொம்பு போன்ற வள்ளியைக் கொடுத்தேன் என்று கூறி.

(வி - ம்.) வள்ளியை வளர்த்தமை கருதி நற்றவவேடன் என்றார் - பம்புதல் - யாண்டும் வியாபகமாதல். வழிப்பெயர் - தன் முன்னோர் பெயர்.

(159)

 மங்கலத் துழனி பொங்க வாசநீர் மனைவி நீட்டச்
 செங்கையேற் றுகுத்து நல்கத் தேவர்க டேவ னேற்றான்
 பங்கய னுமாம கேசர் பாதபூ சனைசெய் தேத்தி
 அங்குரந் தெளித்து முன்கைக் கங்கண மார்த்தல் செய்தான்.

(இ - ள்.) மங்கல விசைகள் முழங்கா நிற்ப மணமூட்டப்பட்ட நீரினைத் தன் மனைவி வார்க்கத் தனது சிவந்த அங்கையிலேற்று வழங்கா நிற்ப அந்நீரினைச் சிவபெருமான் ஏற்றருளினர். அப்பால் பிரமதேவன் முதற்கண் உமாமகேசுர மூர்த்தியின் திருவடி வழிபாடு செய்து வாழ்த்திக் கூலம் வித்தி முருகவேளுக்கும் வள்ளி நாயகியாருக்கும் முன்கையிடத்தே காப்பு நூல் கட்டினன்.

(வி - ம்.) துழனி - இசை. தேவர்கடேவன் - சிவபெருமான். பங்கயன் - பிரமன். உமாமகேசர் - அம்மையப்பன். அங்குரம் - முளை ஒன்பது கூலங்களை வித்துதல். கங்கணம் - காப்பு நூல்.

(160)

 மூத்தநூல் வழியா நாந்தி முகமெனுஞ் சிராத்த மோம்பிப்
 பாத்திய முதல மூன்றும் பாங்குற வமைத்துக் கொண்டு
 தீத்தகு குண்டந் தூய்மை செய்தத னகத்தி ரேகை
 தூத்தகு வடசார் கீழ்சா ரந்திப்பத் தொடங்கி வார்த்தான்.

(இ - ள்.) வேதநூல் கூறிய முறைப்படி முன்னர் நாந்திமுகம் என்னுமாசிராத்தத்தைச் செய்து, பாத்தியம் அர்க்கியம் ஆசமனம் என்னும் மூன்றையும் பண்புற அமைத்துக்கொண்டு வேள்வித் தீயிடுதற்குத் தகுதியுடைய ஓம குண்டத்தைத் தூய்மைசெய்து அக் குண்டத்துள்ளே முறையே தெற்கினும் மேற்கினும் தொடங்கித் தூய தகுதியுடைய வட