| (வி - ம்.) தூசு - திருமணக்கோடியாடைகள். அலர் - மணமாலை. நம்பி - முருகன். பூவை - வள்ளி. மதுவருக்கம் - பால், பழம், சர்க்கரை, நெய் கலந்தமைத்த வுண்டி. (169) | | தீஞ்சுவைச் சொன்றி யுய்ப்பத் திருவிழிப் பார்வை நல்கிக் | | | காஞ்சனக் கலத்தி னீட்டுங் கடவுளா சமனம் வாங்கிப் | | | பூஞ்சுரைக் காம தேனுக் கன்றொடும் போத நோக்கித் | | | தாஞ்சிகை யழற்கு வாமந் தன்னிலே ழடியிட் டானால் |
(இ - ள்.) இனிய சுவையுடைய அவியுணவினை யளிப்ப அதனைத் திருவிழியாலே பார்வையிட்டுப் பின் பொற்கலத்திலே வழங்கிய கடவுட்டன்மையுடைய ஆசமனத்தை வாங்கி யுட்கொண்டு, பின்னர் பொலிவுடைய மடியினையுடைய காமதேனு தன் கன்றோடு போதலை நோக்கிப் பின்னர்த் தாவிஎரிகின்ற கொழுந்தினையுடைய அவ்வேள்வித் தீயிற்கு இடப்பால் ஏழடியிட்டுச் சென்றனன். (வி - ம்.) சொன்றி - சோறு, அவி. காஞ்சனம் - பொன். ஆசமனம் - அங்கையினேற்ற நீர். சுரை - மடி. தாவுஞ்சிகை - தாஞ்சிகை என்புழித் தாவும் என்பது ஈற்றுயிர் கெட்டது. வாமம் - இடப்பக்கம். (170) | | அச்சுதன் முன்ன ரீன்ற வரிவைதன் னிடத்து மூவா | | | அச்சுதந் தரனார் நெற்றி யங்கியிற் கதித்துப் போந்த | | | அச்சுதன் வலக்கை பற்றி முறையினே ழடியிட் டண்மி | | | அச்சுதந் தெளித்த வல்லி யடியெடுத் தம்மி யிட்டான். |
(இ - ள்.) மூத்தலில்லாதவனும் சுதந்திரனுமாகிய சிவபெருமானுடைய நெற்றியின் கண்ணுள்ள நெருப்புக்கண்ணிற் றோன்றி வந்த அத்திருமைந்தன் பண்டு திருமாலீன்ற அவ்வள்ளிநாயகியாரின் பக்கத்தே ஏழடியிட்டு அணுகி அவருடைய வலக்கையைப் பற்றிச் சென்று அச்சுதந் தெளித்து அவ்வள்ளிநாயகியாரின் திருவடியைப்பற்றி எடுத்து அம்மியின்மேல் இட்டருளினன். (வி - ம்.) அச்சுதன் - திருமால். மூவாச் சுதந்தரனார் - சிவபெருமான். அச்சுதந்தரனார் என்புழிச் சுட்டு; உலகறி சுட்டு. அச்சுதன் - அந்தத்திருமகன். அச்சுதம் - அறுகும் அரிசியும். (171) | | பொரியெரி மனைவி யட்ட வுடனின்று போந்து முன்போல் | | | எரிமணித் தவிசின் வைகி யிலங்குமங் கலநாண் வாங்கித் | | | தெரிவைதன் மிடற்றிற் றேவ துந்துமி முழங்க யாத்தான் | | | பிரமனு முற்ற வங்கி வினையினைப் பிறக்கி யிட்டான். |
(இ - ள்.) வேள்வித்தீயின்கண் தன் வாழ்க்கைத் துணையாகிய வள்ளி பொரி சொரிதற்கண் அவளுடன் கூடிநின்று வந்து பண்டுபோல ஒளிமணியிருக்கையின் கண் அமர்ந்து விளங்கா நின்ற மங்கல நாணினை |