| (வி - ம்.) பொறி - புள்ளி, பூவை - வள்ளி ; உவமவாகுபெயர். நிமலன் - முருகன். கறி - மிளகுகொடி. முறி - தளிர். (175) | | எத்துணை யறங்கள் சால வீட்டினன் வேடர் கோமான் | | | பத்தியிற் பலநாட் டாழ்ந்தென் பாவையை யளிப்ப வேற்ற | | | உத்தமன் றானே யண்மி யொளியில னாகித் தாழ்ந்து | | | புத்திரி செங்கை பற்ற வென்றனன் புலவர் கோமான். |
(இ - ள்.) தேவேந்திரன் "யான் பற்பல நாள் மெய்யன்போடு வழிபாடு செய்யாநிற்ப என்மகள் தேவசேனையை ஏற்றருளிய அப்பெருமாள் தானே வலிந்து சென்று ஒளியற்ற வேடனாகி அடியில் வீழ்ந்து வணங்கித் தன் மகளினது சிவந்த கையைப் பற்றுதற்கு இவ் வேடர் வேந்தன் எவ்வளவு நல்லறங்களைப் பெரிதும்செய்து அவற்றின் பயனைச் சேர்த்தனனோ அறிகிலேனே என்று மருண்டனன். (வி - ம்.) பத்தி - அன்பு. என்பாவை என்றது தேவசேனையை. உத்தமன் - மேலோன். புத்திரி - ஈண்டு வள்ளி. புலவர் கோமான் - இந்திரன். (176) | | மாதவ னெனும்பே ரல்லான் மாதவ மீங்கொன் றில்லை | | | மாதவன் புலவர் கோமான் மற்றவன் றன்னிற் சால | | | மாதவன் புளினர் கோமான் வளர்த்தரு டெய்வக் கற்பின் | | | மாதவள் பாங்கி னின்றா ளென்றனன் மதுவை யட்டோன். |
(இ - ள்.) மதுவென்னும் அசுரனைக் கொன்றவனாகிய திருமால், "எனக்கு மாதவன் என்று பெயர் வறும் பெயர் மாத்திரையாயிருந்த தன்றி அதன் பொருளாகிய பெரிய தவமாண்பு என்பாற் சிறிது மில்லையே! வாய்மையாகவே பெரிய தவப்பயனையுடையோன் இந்திரன்; அவ்விந்திரனுங் காட்டில் மிகவும் பெரிய தவப்பயன் எய்தியவன் வேடர்வேந்தன். அவனினுங் காட்டில் மிகப் பெரிய தவத்தையுடையோள் வள்ளிநாயகியை வளர்த்தருளிய தெய்வக் கற்பினையுடையளாய் அவன் பக்கத்தே நிற்கின்ற மனைவியே ஆவள். (வி - ம்.) மாதவன் - திருமால், பெரிய தவத்தையுடையோன். புலவர் கோமான் - இந்திரன், புளினர் கோமான் - வேட மன்னன். பாங்கி நின்றாள் - மனைவி. (177) | | இந்திரன் மனைவி முன்ன ரீட்டினள் சீர்த்தி யெல்லாம் | | | வெந்திறல் வேட னில்லும் விளைத்தன ளின்று சால | | | எந்தரத் தென்னோ தெய்வ மேதுமின் றாக்கிற் றென்றாள் | | | செந்திரு மானை யுன்னித் திருவுளேம் யாமு மென்றாள். |
|