| எம்முடைய கூற்றில் மட்டும் என்னையோ புகழ் சிறிதும் இல்லையாக்கிற்று என்று தன்னுள்ளே நொந்தவள் வள்ளிநாயகியை யீன்ற மான் தானாதலை நினைத்து யாமும் பெரிதும் தவச் செல்வம் உடையமே என்று மகிழ்ந்தாள். (வி - ம்.) சீர்த்தி - மிகுபுகழ். இல் - மனைவி, என்றாள் : பெயர் மானை என்பதற்கு வள்ளியை என்று கொண்டு வள்ளியை நோக்கி அவள் தன் மகளாதலைக் கருதி யாமும் திருவுளேம் என்றாள் எனினுமாம். (178) | | வல்லிநற் றாயைப் புல்லிக் கொண்டனள் வலாரி யில்லாள் | | | வெல்லுநாற் கோட்டு வேழம் வியந்தது செவிலித் தாயைப் | | | புல்லினர் பாங்கி தன்னைப் புலோமசை மகளைச் சூழ்ந்த | | | பல்லிணர்க் கோதைக் கூந்தற் பாங்கியர் பலரு மன்னோ. |
(இ - ள்.) இந்திராணி வள்ளியின் நற்றாயை மகிழ்ந்து தழுவி உறவு கொண்டாள். வெல்லுமியல்புடைய நான்கு மருப்பினையுடைய ஐராவதம் என்னும் யானை வள்ளியின் செவிலித்தாயைப் பாராட்டிக் கேண்மை கொண்டது. இந்திராணி மகளாகிய தேவசேனையைச் சூழ்ந்துள்ள பலவாகிய பூங்கொத்துக்களாலியன்ற மலரணிந்த கூந்தலையுடைய தோழியர் பலரும் வள்ளியின் உசாத்துணைத் தோழியைத் தழுவி நட்புக் கொள்ளா நின்றனர். (வி - ம்.) வல்லி - வள்ளி. வலாரி - இந்திரன். நாற்கோட்டு வேழம். ஐராவதம்; இது தேவசேனையின் செவிலித்தாய். பாங்கி - வள்ளியின்றோழி. புலோமசை மகள் - தேவசேனை. (179) | | ஒருக்கிய வுளத்த ராகி யுயர்தவ மாற்றி னோர்கள் | | | தரைத்தலை யிழிந்த சார்பிற் றவிரினுந் தவத்தி னாற்றிற் | | | பொருத்துழி யெவர்க்கு மேலாய்ப் பொலிவது வாய்மை யென்னாத் | | | திருக்கிளர் தெய்வ மாதர் விம்மிதந் திகழ நின்றார். |
(இ - ள்.) அழகுமிக்க தேவமகளிர், (வள்ளியின்பேற்றினைக்கருதி) "ஒன்றுபடுத்த நெஞ்சமுடையோராய் உயரிய தவத்தினை இயற்றியவர், நிலத்தின் கண்ணே இழிந்த குலத்திலே தோன்றினும் ஊழானது மேலைத் தவப்பயனோடு கூட்டுங்காலத்தே எல்லோரையுங் காட்டின் மேம்பாடுடையராய்ப் பொலிவுறுதல் உண்மையேயாகும்," என்று தம்முள் விம்மிதமுற்று அம் மனநிலை விளங்க நிற்பராயினர். (வி - ம்.) ஒருக்கிய - ஒன்றுபடுத்த. தவத்தினாறு என்றது அதன் பயனை. (180) | | அருந்தவப் பயனு ளார்கட் கடுத்தவெவ் வுழியு மாவா | | | திருந்திய போக வைப்பாய்த் திகழ்வது திண்ணம் போலாம் | | | மருந்தம ருலகு நேரா வளத்தொடு வள்ளி மன்றற் | | | கிருந்ததிவ் வோங்க லென்னா மாந்தர்க ளேமுற் றாரே. |
|