| (இ - ள்.) இனி இந்நிலவுலகத்து மாந்தர் "ஆ! ஆ! அரிய தவப் பயன் கைகூடப் பெற்றவர்களுக்கு அவர் எவ்விடத்தினை அடைந்தாலும் அவ்விடம் திருத்தமுற்ற துறக்கமேயாக விளங்குவது ஒருதலையே. ஈண்டுக் காண்மின்! இத்திருத்தணிகைமலை தவச் செல்வியாகிய வள்ளியின் திருமண விழவிற்கிடனாக அமிழ்தமிருக்கின்ற வானவர் உலகும் தனக்கொப்பாகாதபடி பெரிய வளத்தோடு இருந்ததன்றோ என்று கூறித் தம்முள் விம்மித மெய்தாநின்றனர். (வி - ம்.) ஆ! ஆ! வியப்பு. போகவைப்பு - துறக்கம். இவ்வோங்கல் - இத்திருத்தணிகை மலை. மன்றற்கு வளத்தொடு இருந்தது என்க. (181) | | தரையுரங் கிழித்த கோடு மார்பிடைத் தயங்க வேணி | | | விரையுரங் கிழித்த கொன்றை மிலைத்தவித் தகனை வேலைத் | | | திரையுரங் கிழித்த சேற்க ணன்னையைத் தேவி யோடும் | | | வரையுரங் கிழித்த வைவேல் வள்ளல்சென் றிறைஞ்சி னானால். |
(இ - ள்.) கிரௌஞ்சமலையின் மார்பினைப் பிளந்த கூரிய வேற் படையை ஏந்திய வள்ளலாகிய முருகப்பெருமான் வள்ளி நாயகியோடும் சென்று நிலத்தின் மார்பினையகழ்ந்த பன்றியினது கொம்புகள் தனது திருமார்பில் விளங்காநிற்பச் சடையின் மிசைத் தனது மணத்தானே பிறருடைய நெஞ்சினைக் கவர்ந்து கொண்ட கொன்றை மாலையினைச் சூடியருளிய வாலறிவனாகிய சிவபெருமானையும் கடலலையினைக் கிழித்த சேல்மீன் போன்ற கண்ணையுடைய உமையம்மையும் வணங்கினன். (வி - ம்.) கோடு - திருமாலாகிய பன்றியின் கொம்பு. வேணி - சடை. வரை - கிரௌஞ்ச மலை. (182) | | பொழிந்தனர் கருணை வெள்ளம் பொலிகவென் றெடுத்துத் தைவந் | | | திழிந்தனர் தவிசி னின்று மிலங்குதங் கோயில் புக்கார் | | | அழிந்தன மலங்கண் மூன்று மகமெலாந் தேக்கி யோகை | | | வழிந்தன வெவர்க்கு மென்றான் மன்றலார் வகுக்க வல்லார். |
(இ - ள்.) வணங்கியதும் அப்பனும் அம்மையும் இருக்கையினின்று இறங்கிப் பொலிக! பொலிக! பொலிக! என்று வாழ்த்தி மணமக்களைக் கையானெடுத்து தழுவிக் கொண்டனர். பின்னர் விளங்கா நின்ற தம்முடைய திருக்கோயிலை எய்தினர். அப்பொழுது உலகில் உள்ள எல்லோருக்கும் ஆணவமுதலிய மூன்று மலங்களும் தஞ்சத்தி கெட்டொழிந்தன. உள்ளமெல்லாம் மகிழ்ச்சி நிரம்பி வழிந்தன. இங்ஙனமாயின் இத்திருமண விழாச் சிறப்பினை யாரே வகுத்தோத வல்லுநராவர். (வி - ம்.) அகம் - உள்ளம். ஓகை - உவகை. மன்றல் - திருமணம். (183) வேறு | | மாய னாதியர் வார்கழற் றாழ்ந்தினி | | | மேய யாவரும் வீதியிற் காணிய |
|