பக்கம் எண் :

வள்ளிநாயகி திருமணப் படலம்1325

 போயு லாவரல் புந்திகொ ளாயென
 ஆய னானவர்க் கவ்வர மீந்தனன்.

(இ - ள்.) அச் செவ்வியில் திருமால் முதலிய தேவர்கள் முருகப் பெருமானுடைய நெடிய கழலணிந்த சேவடிகளை வணங்கிப் "பெருமான்! இனி ஈண்டுக்குழுமிய அனைவரும் கண்டுய்தற் பொருட்டுத் திருவீதியிற் போய்த் திருவுலாச் செய்தருளத் திருவுளம் பற்றவேண்டும் என்று" இரப்பத் தாயை யொத்தவனாகிய முருகப் பெருமானும், அத் திருமால் முதலியோர்க்கு அவ்வரத்தை
வழங்கியருளினன்.

(வி - ம்.) மாயன் - திருமால். ஆயனான் - தாயை யொத்தவன். ஆய் - தாய். காணிய - காண்டற்கு. புந்தி - திருவுளம்.

(184)

 பன்னி றப்பக டுண்டுகொ லோவென்
 எந்நி றக்கல னுங்கதிர்த் தேர்தரும்
 துன்ன ருந்திறற் றூங்குகை வாரணம்
 முன்ன ருய்த்தனர் முன்னவ னேறினான்.

(இ - ள்.) வரம்பெற்ற தேவர்கள் கண்டோர் பல நிறமுடைய களிற்றியானையும் உண்டோ என்று மருளும்படி பன்னிறமணிகளை யுடைய அணிகலன்களும் பன்னிறந்தோற்றி அழகு தருகின்ற, கிட்டுதற்கரிய பேராற்றலுடைய தூங்காநின்ற துதிக்கையையுடைய களிறொன்றனை எம்பெருமான் திருமுன்னர்ச் செலுத்தினர். பெருமானும் அதன் பிடரிமிசை ஏறியருளினன்.

(வி - ம்.) பகடு - யானை. பன்னிற மணிகளும் அக்களிற்றின் மேனியில் பன்னிறங்களையும் உண்டாக்கின என்பது கருத்து. எனவே, நன்கு ஒப்பனை செய்யப்பட்ட யானை என்றாராயிற்று.

(185)

 பரந்நு மாதர்பல் லாண்டுப யின்றுளம்
 சுரந்த வோகைய ராய்ப்புறஞ் சூழ்தர
 வரந்த ழைத்தசி விகையின் வையகத்
 தரந்தை தீர்க்கும ணங்கிவர்ந் தாளரோ.

(இ - ள்.) உலகத்தின் துன்பத்தைத் தீர்த்தருளும் தெய்வப் பெண்ணாகிய வள்ளி நாயகியார், அமரமகளிர் பலரும் பரவிப் பல்லாண்டு கூறி வாழ்த்தி நெஞ்ச நிறைந்த மகிழ்ச்சியுடையராய்ப் புறஞ் சூழ்ந்து வாராநிற்ப மேம்பாடுமிக்கதொரு சிவிகையின்கண் ஏறினர்.

(வி - ம்.) வரம் - மேம்பாடு. அரந்தை - துன்பம்.

(186)

 ஒற்றை யங்கலை யூர்புன னீண்முடி
 பற்றி வேய்ந்தப ரன்குரு வாதலான்
 முற்றும் வான்மதி யேமுடி வைத்தெனக்
 கற்ற சோமன்க விகைக வித்தனன்.

(இ - ள்.) இம் முருகப்பெருமான், ஊராநின்ற கங்கையணிந்த தனது நெடிய சடையின்கண் ஓரோவொரு கலைமட்டுமுடைய இளம்பிறையைப்