பக்கம் எண் :

வள்ளிநாயகி திருமணப் படலம்1327

 விரைது ழாவிய மென்பனி நீர்புனல்
 அரைய னண்ணன்மெய் தூவவ மைந்தனன்
 வரையி ழுக்கச்சி விறியின் வாங்கினார்
 புரையி லாவவன் பொன்னகர் வாழ்நரே.

(இ - ள்.) வருணன் நறுமண மூட்டிய மெல்லிய பனி நீரை எம் பெருமான் திருமேனியிற் றூவும் செயலிலீடுபட்டனர். குற்றமற்ற அவ்வருணனுடைய நகரின்கண் வாழுந் தேவர்கள் அத் திருத்தணிகைமலை இழுக்கலுறும்படி நீர் வீசுந் துருத்தியால் மணநீரைத் தூவா நின்றனர்.

(வி - ம்.) விரை - மணம். புனல் அரையன் - வருணன்.

(191)

 மாலை யாத்தக விகைவ ருக்கமும்
 ஆல வட்டமு மார்ந்தசாந் தாற்றியும்
 கோல வெள்ளையுங் கொண்டனர் பானுவும்
 சாலு ஞாயிற்று லகவர் தாமுமே.

(இ - ள்.) ஞாயிற்றுத் தேவனும் அவன் உலகில் வாழும் தேவர்களும், மலர்மாலை தூக்கிய குடை வகைகளையும், ஆல வட்டத்தையும் பொருந்திய சாந்தாற்றியையும் அழகிய மேற்கட்டியினையும் கைக் கொண்டனர்.

(வி - ம்.) சாந்தாற்றி - சிற்றால வட்டம் என்னும் விசிறி. வெள்ளை - மேற்கட்டி. பானு - ஞாயிறு.

(192)

 சோதி நாரதத் தூமுனி பாலராய்
 ஆதி யாழ்முதல் யாவும மைத்துளர்
 கோதி லாதகு ணந்தகும் யாழினோர்
 மாத ராரொடும் வண்புகழ் பாடினார்.

(இ - ள்.) குற்றமற்ற குணத்தகுதியுடைய கந்தருவர் தம் மகளிரொடும் ஞானவொளி படைத்த நாரதன் என்னுந் தூய முனிவரின் கூற்றிலடங்கிப் பேரியாழ் முதலிய இசைக்கருவிகளை எல்லாம் பண்ணுறுத்திக் கொண்டு எம்பெருமானுடைய வளவிய திருப்புகழைப் பாடா நின்றனர்.

(வி - ம்.) சோதி - புகழுமாம். ஆதியாழ் - பேரியாழ். யாழினோர் - கந்தருவர்.

(193)

 குளிர்ப்பக் கண்டகொ ழுங்கணு நெஞ்சமும்
 மிளிர்ப்பக் காமரு மின்னினு டங்குபு
 தெளிர்ப்பக் கைவள்ளி தெய்வத மாதரார்
 தளிர்ப்பத் தீஞ்சுவை யாடலிற் றங்கினார்.