| (இ - ள்.) வானவர் மகளிர், கண்டோருடைய கொழுவிய கண்களும் நெஞ்சமும் மகிழ்ச்சியாற் றிகழும்படி விரும்புதற்குக் காரணமான மின்னல் போன்று நுடங்கவும் தங் கைவளையல் ஒலிப்பவும் இனிய சுவை மிகாநிற்பவும் கூத்தாடற்றொழிலி லீடுபட்டனர். (வி - ம்.) மிளிர்த்தல் - திகழ்தல். நுடங்குபு - நுடங்கி ; நுடங்க என்க. தெளிர்த்தல் - ஒளித்தல். வள்ளி - வளையல். (194) | | மாண்ட சோதிம ணிமுடி வானவர் | | | காண்ட கக்கதித் தாடுநர் பாற்றழுஉம் | | | பாண்டி லுங்குழ லுங்குரற் பாடலும் | | | தீண்டு கைம்முழ வுந்திசை தேக்கின. |
(இ - ள்.) காட்சியின்பமுண்டாகத் தோன்றி ஆடுவோராகிய மாட்சிமையுடைய ஒளியுடைய மணிகளாலியன்ற முடிக்கலனையுடைய தேவர் தம்பாற் றழுவியுள்ள பாண்டிலும் வேய்ங்குழலும் மிடற்றுப் பாடலும் கையாற் றீண்டி முழக்கப்படும் மத்தளமும் தம் மிசையாலே எண்திசைகளையும் நிரப்பின. (வி - ம்.) கதித்து - தோன்றி. பாண்டில் - கஞ்சதாளம். குரற் பாடல் - மிடற்றுப் பாடல். கைதீண்டுமுழவென்க. (195) | | பானு கம்பன்ப ணிலமு ரன்றன | | | மான வாணன்கு டமுழா மல்கிய | | | தான பீலிவ யிர்பணை யாதிய | | | ஈன மில்கண நாதரி யம்பினார். |
(இ - ள்.) பானு கம்பனுடைய சங்கங்கள் முழங்கின; வாணா சுரனுடைய குடமுழா முழக்கம் பெருகிற்று. இயற்றப்பட்ட சிறு சின்னங்களும் கொம்புகளும் பறைகளும் இன்னோரன்ன பிறவுமாகிய கருவிகளைக் குற்றமற்ற சிவகணத் தலைவர்கள் முழக்கா நின்றனர். (வி - ம்.) பானுகம்பன் - ஆயிரந்தலையுடையானொரு சங்கம்பிடிப்போன். பீலி - சிறுசின்னம். வயிர் - கொம்பு பணை - பறை. (196) | | இலக்கர் வீரர்கை யேந்துப டையொடும் | | | கொலைக்க ளிற்றைக்கு லாயினர் வீரருள் | | | தலைக்க ணின்றவன் றாங்குகை வேத்திரத் | | | தலக்கண் சிந்தவ டர்சனந் தாக்கினான். |
(இ - ள்.) இலக்க வீரர்கள் கையிலேந்திய படைக்கலன்களோடு கொலைத் தொழில் வல்ல களிற்றுயானையைச் சூழ்ந்து சென்றனர். அவ் வீரருள் முன்னின்ற வீரவாகு தன் கையிலேந்திய பிரம்பினாலே துன்ப மகலும்படி ஆண்டுக் குழுமுகின்ற மக்களைத் தாக்கி யகற்றினான். (வி - ம்.) குலாயினர் - சூழ்ந்தனர். வேத்திரம் - பிரம்பு. (197) |