| | வடகி ழக்குத்தி சைப்புற வாழ்க்கையங் | | | கடவு ளேற்றிமிற் கண்ணுதற் புண்ணியன் | | | தொடலை மார்பந் துணைக்கையிற் பின்னுபு | | | முடிவி லாதவி ருதுமு ழக்கினான். |
(இ - ள்.) வடகிழக்குத் திசையின்கண் வாழா நின்ற வாழ்க்கையையும் இமிலையுடைய தெய்வ விடையினையும் நெற்றிக் கண்ணையும் உடைய அறவோனாகிய ஈசானன் மாலையணிந்த தன் மார்பின்கண் இரண்டு கைகளையும் கட்டிக்கொண்டு எம்பெருமானுடைய அழிவற்ற விருதுகளைக் கூறி வந்தனன். (வி - ம்.) ஈசானன் என்னும் திசைக்காவலன் விருது கூறினான் என்க. விருது - வெற்றிப்புகழ். (198) | | சோம திக்கினன் றுன்னிவ லப்புறம் | | | காமர் பாகடை கைத்தல நீட்டினான் | | | வாம பாகம ரீஇப்பொற்ப டியகம் | | | நாம வேற்றரு மன்னணு குற்றனன். |
(இ - ள்.) வடதிசைக் காவலனாகிய குபேரன் எம்பெருமானுடைய வலப்பக்கத்தே நின்று பாக்கும் வெற்றிலையும் திருக்கையி லீந்தனன். இடப்பாகத்தே அச்சந்தரும் வேலினையுடைய கூற்றுவன் பொன்னாலியன்ற படிக்கத்தைக் கைக்கொண்டு வாராநின்றனன். (வி - ம்.) சோமதிக்கு - வடதிசை. பாகு - பாக்கு. அடை - வெற்றிலை. படியகம் - படிக்கம் - எச்சி லுமிழ்கலம். தருமன் - கூற்றுவன். (199) | | மாகர் போற்றிய மண்டமர் ஞாட்பிடைத் | | | தோகை மாமயி லாகிய தோன்றறான் | | | ஏக நாயக னேவலி னங்குசப் | | | பாக னாகிப்ப கடுந டத்தினான். |
(இ - ள்.) சிவபெருமானுடைய அருட்பணியை மேற்கொண்டு தேவர்களாற் புகழப்பட்ட போர்த்தொழின்மிக்க களத்தின்கண் தோகையை யுடைய பெரிய மயிலாகி எம்பெருமானைச் சுமந்த தேவேந்திரனே தோட்டியையுடைய வலவனாகி யானையை நடத்தாநின்றனன். (வி - ம்.) மாகர் - தேவர். ஞாட்பு - போர்க்களம். தோன்றல் - ஈண்டிந்திரன். ஏக நாயகன் - சிவபெருமான். (200) வேறு | | வரையு மாடமு மேடையு மண்டப மாலையும் | | | விரைய சோலையும் வாயிலும் வீதியு மாந்தர்கள் | | | நிரைய விண்ணவர் விண்ணிட மெங்குநி ரைந்தனர் | | | அரைய ரூர்களி றவ்வயி னவ்வயி னின்றவே. |
|