| (இ - ள்.) மலைமீதும் மாடங்களினும் மேடைகண் மீதும் மண்டப வரிசைகளிடத்தும் நறுமணமுடைய பூம்பொழில்களூடும் வாயில்களிடத்தும் வீதிகளினும் மக்கள் நிரம்பியதனால் தேவர்கள் ஈண்டிடம் பெறாமல் வானவெளியெல்லாம் நிரம்பினர். அரசர்கள் ஊர்ந்துவரும் களிறுகள் வழி பெறாமல் இடந்தொறும் நிற்பனவாயின. (வி - ம்.) வரை - திருத்தணிகை மலை. மாலை - வரிசை. ஆலயம் என்பது பாடமாகலாம் என்று தோன்றுகின்றது. (201) | | புலவர் சிந்திய பொன்னரி மாலையும் பூக்களும் | | | பலவ ரைக்குலம் பம்பிய தென்னப்ப யின்றன | | | நிலனி ரைந்தவர் தாட்பட நீறுபட் டொய்யெனக் | | | குலவு தம்பதி கொண்டென விண்ணினி வந்தவே. |
(இ - ள்.) வானவர் சிந்திய பொன்னரி மாலைகளும் மலர்களும் பலவாகிய மலைக்கூட்டங்கள் பரவின என்னும்படி குவிந்தவை நிலத்திலே குழுமிய மக்கட்கூட்டத்தின் அடிகள் படுதலானே விரைந்து துகளாகி தாம் இருக்கும் தமது வானவர் நாட்டிற்கு வழிக்கொண்டாற் போன்று விண்ணிலெழுந்துயர்ந்தன. (வி - ம்.) பயின்றன : வினையாலணையும் பெயர்; எழுவாய். (202) | | கருப்பு ரங்கமழ் குங்கிலி யங்கன லூட்டிய | | | மருப்பெ ரும்புகை வானுல கெங்கும்வ ளாவிய | | | தருப்பு மென்முலை யாரொடு மண்டர்த ணந்தவவ் | | | விருப்பு றங்கியி ளைப்பற வல்லிரு ளேய்ந்தென. |
(இ - ள்.) அமரர் தம்முடைய காதலியராகிய அரும்புபோன்ற மென் முலையையுடைய மகளிரைப் பிரிந்தமையாலே அம்மகளிர்க்குண்டான அந்த இருத்தல் என்னும் இன்னாவொழுக்கத்தின்கண் அம்மகளிர் உறங்கிக் கிடந்து நலிவகலும் பொருட்டு உலகெல்லாம் இருள்வந்து சூழ்ந்தாற்போன்று, கருப்பூரமும் மணங்கமழும் குங்கிலியமும் நெருப்பிலிடப் பட்டமையா லுண்டான மணமுடைய பெரிய புகை வானவருலக மெங்கும் சூழ்ந்தது. (வி - ம்.) மரு - மணம். அண்டர் - தேவர். இருப்பு - இருத்தல் என்னும் முல்லையுரிப் பொருள். (203) | | உரத்தி னப்பிய மான்மத மூட்டிய சாந்தரோ | | | வெரித்த லைக்கண்வி ராவவெ ரிந்தலை யேர்கொள | | | வரித்த சந்தன மார்பிடை யப்பிம யங்கின | | | திரித்து வல்வினை தத்தமி யற்கைதி ரிந்தென. |
(இ - ள்.) வலிய ஊழ்கள் தத்தமக் குரிய இயற்கையினின்றும் மாறுபட்டாற் போன்று மார்பின்கண் பூசப்பட்ட கத்தூரி கலந்த சாந்தம் முன்னிற்போர் முதுகின்கண் கலந்தும், முதுகின்கண் அழகுண்டாக |