| எழுதப்பட்ட சந்தனம் பின்னிற்போர் மார்பிடைப் பூசப்பெற்றும் பிறழ்ந்து கலப்புற்றன. (வி - ம்.) உரம் - மார்பு. மான்மதம் - கத்தூரி. வெரித்தலை - முதுகில். வெரிந்தலை - வலித்தது. (204) | | வடவை முற்றுந் திரட்டி யிடமலை யோடுபின் | | | படர வோலிடு பவ்வங்க ளொத்தன பல்லியம் | | | அடிக ளின்றறி வாமெனுஞ் சோடையி னார்த்துராய்த் | | | தொடர்வ போன்றன பின்னர் முழக்குஞ் சுருதிகள். |
(இ - ள்.) வடவைத்தீ நீர்முழுதுந் திரட்டிப் பின் விடுதலானே கடல்நீர் தம்பாற் றோன்று மலைகளோடு மீண்டும் சேர்தற்கு முழங்கினாற் போன்று பலவாகிய இசைக் கருவிகளும் முழங்கின. மறைகள் எம்பெருமானுடைய திருவடிகளையின்றேனும் அறிவேம் என்னும் ஆர்வத்தினாலே எம்பெருமான் பின்னர் முழங்கின. (வி - ம்.) வடவை - ஊழித்தீ. ஓலிடும் - முழங்கும், சோடை - ஆர்வம். சுருதி - மறை. (205) வேறு | | முருக னோமணி மார்பனோ மலர்க்கணை | | | முனைவனோ விசும்பாளும் | | | திருவ னோவென வவரலார் தமைப்புனைந் | | | துரைப்பவர் திருமார்பத் | | | தொருவ னேமுத லனைவருந் தவ்வென | | | வொலிவனப் புடையானை | | | முருக னேயிவன் முருகனே யிவனென | | | மொழிந்தன ரென்செய்வார். |
(இ - ள்.) உலகின்கண் அழகான் மிக்கோனைக் கண்டுழி இவன் முருகனோ? கவுத்துவமணியணியும் திருமாலோ ? மலர்க்கணையாலே போரிடும் காமனோ ? விண்ணுலகத்தை ஆளா நின்ற இந்திரனோ ? என்று வண்ணிக்கும் இயல்புடையோர் திருமகள் வீற்றிருக்கும் மார்பினையுடைய அத்திருமால் முதலியோர் பொலிவிலராம்படி தழைத்த பேரழகுடைய முருகப்பெருமானைக் கண்டுழி உவமையாவாரை யறியாமையான் இவன் முருகனே ! இவன் முருகனே ! என்றே மொழிவாராயினர் ; வேறு என்னை தான் சொல்வர் ! (வி - ம்.) மணி - கவுத்துவமணி. மலர்கணையானே முனைபவன் என்றவாறு. முனைவன் - சினப்போன் ; போரிடுவோனுமாம். தவ்வெனல் : குறிப்பு மொழி. பொலிவிழத்தல். (206) |