| வேறு | | தண்ண றும்புன றசும்பி னேந்திப்போய் | | | அண்ணன் மாகளிற் றடியின் வாக்குபு | | | கண்ணி யுங்கமழ் கலவை யுஞ்செழுஞ் | | | சுண்ண முஞ்சிலர் சொரிந்து போற்றினார். |
(இ - ள்.) திருவுலாக் காட்சியைக் கண்டோர் சிலர் குடங்களிலே குளிர்ந்த நறிய நீரை முகந்து கொடுபோய் பெருமான் ஊர்ந்து வரும் பெரிய களிற்றியானையின் அடிகளிலே வாக்கிப் பின் மலர்மாலையும் மணங்கமழாநின்ற கலவைச்சாந்தமும் செழிப்புடைய பொற்சுண்ணமும் சொரிந்து வணங்காநின்றனர். (வி - ம்.) தசும்பு - குடம். அண்ணல் சிறப்பெனக் கொண்டு களிற்றிற் கடையாக்கினுமாம். (207) | | சுரக்குந் தம்முகச் சுடர்க வர்ந்துவிண் | | | கரக்கு மாதவற் கரைத்துக் காட்டியாங் | | | கரக்கு நீர்க்கல னங்கை யிற்சுலாய்ப் | | | பரக்க மண்ணிடைப் பாய்த்தி னார்சிலர். |
(இ - ள்.) சிலமகளிர் தம் முகத்திலே சுரவாநின்ற சுடரினைக் கவர்ந்து கொண்டு விண்ணிடத்தே சென்று மறையா நின்ற கதிரவனைக் கரைத்து மற்றையோர்க்குக் காட்டினாற்போன்று, அரக்குநீர் நிரப்பிய கலத்தினுட் கையிட்டுச் சுழற்றி நிலத்தின்மேற் பரவுமாறு பாய்ச்சா நின்றனர். (வி - ம்.) கதிரவன் நிழலுருவம் கலத்துட் டோன்றலின் அவ் உருவத்தைக் கரைத்தாற்போலக் கையானீரைச் சுற்றினர் என்பது கருத்து. கதிரவனைக் கரைத்தற்கு ஏது அவன் தம்முகச் சுடரைக் கவர்ந்தமை. (208) | | குவவுக் கோணுதல் குறித்துத் தேய்தரும் | | | உவவுத் திங்களை யுறுப்ப கைத்தகைத் | | | தவவுக் கோளினார்க் கறிவித் தாங்குத்தூய்க் | | | கவவுக் கைப்பொரி கஞற்றி னார்சிலர். |
(இ - ள்.) வேறு சிலமகளிர், தம்முடைய பெரிய வளைந்த நெற்றியினைப் போலவாதல் வேண்டித் தேயாநின்ற முழுத்திங்களின் கலைகளை முறித்து முறித்து, அத்திங்களை அவாவும் பாம்புக்கோள்களுக்குத் தெரிவித்தாற்போன்று பொரியினைக் கையகத்திட்டு இட்டுச் சிதறினார். (வி - ம்.) பொரி நிரப்பிய வட்டில் முழுத்திங்கட்குவமை. பிடி பிடியாய் அள்ளுதல் திங்களின் கலைகளை முறித்தற்குவமை. முறித்தற்குக் காரணம் தந்நுதலை ஒத்தற்குத் தேய்தல். (209) |