பக்கம் எண் :

வள்ளிநாயகி திருமணப் படலம்1333

 புனித மென்மொழி பொருவ நின்றெழுந்
 துனியி னாற்சிலர் சுளித்தொ ழித்தெனக்
 கனிவ ருக்கமுங் கருப்புத் துண்டமும்
 இனிய கட்டியு மீண்ட வீசினார்.

(இ - ள்.) தூய மெல்லிய அறமொழிகள் தம்மை வருத்துதலானே தம் நெஞ்சினின்றும் எழும் வருத்தத்தாலே சினந்து அம்மொழிகளைப் புறக்கணித்து ஒழித்தாற்போன்று சிலர் கனி வகைகளையும் கரும்புத் துண்டத்தையும் கரும்புக் கட்டியினையும் செறிய வீசா நின்றனர்.

(வி - ம்.) துனி - வருத்தம். சுளித்து - சினந்து.

(210)

 பரித்தன் முற்றுமோ பார நீக்கெனத்
 தரித்த வொள்ளிறைத் தருணக் கண்ணியைத்
 தெரித்த பட்டினைச் செம்பொற் குப்பையை
 உரித்தென் றோகையி னுதவி னார்சிலர்.

(இ - ள்.) இவற்றைச் சுமத்தல் ஒல்லுமோ ஒல்லாதென்று இச் சுமையை அகற்றுதல் போன்று சிலர் தாம் தரித்த ஒளி பொருந்திய முன்கையிடத்துச் செவ்விமாலையினையும் விளக்கமுடைய பட்டாடையினையும் செம்பொற் குவியலையும் இவை எல்லோர்க்கும் உரிமையுடையன என்று மகிழ்ச்சியோடு வழங்கினர்.

(வி - ம்.) பரித்தல் - சுமத்தல். பாரம்நீக்கு - என்றது பாரம் நீக்குதல் என்னும் பொருட்டு. தருணம் - செவ்வி.

(211)

 பாடி னார்சிலர் பணிந்து தட்டமிட்
 டாடி னார்சில ராட லோடுமுன்
 ஓடி னார்சில ருருவ நோக்கியே
 நீடி னார்சிலர் பலர்நெ ருக்கவே.

(இ - ள்.) சிலர் பாடா நின்றனர், சிலர் வணங்கிக் கைகொட்டி ஆடா நின்றனர். சிலர் ஆடிக்கொண்டே முன்னர் ஓடினர். வேறு சிலர் பலர் தம்மை நெருக்கவும் எம்பெருமானுடைய திருவுருவக்காட்சியிலீடுபட்டபடியே நெடிது நின்றனர்.

(வி - ம்.) தட்டமிடல் - கைதட்டுதல்.

(212)

 முருக்கு மண்ணன்முன் முகுந்தன் மேலெனத்
 திருக்கு மால்கொடு செப்பி னோன்பொர
 ஒருக்கி மேலெழு முகளக் கைசனம்
 நெருக்க நாற்றிலர் நின்று ளார்சிலர்.

(இ - ள்.) அழித்தற் கடவுளாகிய சிவபெருமான் திருமுன் திருமால் முழுமுதல்வன் என்று மயக்கத்தாற் கை எடுத்துக் கூறிய