| | தளிர ரும்புமெல் லிளங்கொடி தலைநிறீஇ யென்ன | | | உளம ருங்கெலாந் தலைநிறீஇ நின்றுராய்த் தொழுதார். |
(இ - ள்.) தம் மார்பிடை முகிழ்க்கும் முலைகளின் வளர்ச்சி எத்துணைத்தோ அத்துணையாக மலர்போன்ற கண்ணிடத்தே வளரா நின்ற கள்ளத்தன்மையும், நெஞ்சினிடத்தே வளரா நின்ற காதற்பண்பும் பெருகித் தம்மைப் பெரிதும் மயக்குதலானே எம்பெருமான் றிருமுன்பு உள்ள இடமெல்லாம் அப்பெதும்பை மகளிர் செறிந்து தளிரினையும் அரும்பினையும் உடைய மெல்லிய இளைய பூங்கொடிகள் தலையெடுத்து நின்றாற்போன்று தொழுது நின்றனர். (வி - ம்.) மருட்ட - மயக்க. மருங்கு - இடம். உராய் - நெருங்கி. (219) | | தமது மாணெழில் விளக்குவான் றனிவனப் புடைய | | | குமரன் மாணுரு மறைக்குந ரேகுடை கவரி | | | நிமிரு நீள்கொடி விசிறியு நிரைநிரை யெடுத்த | | | அமரர் வாழியென் றகங்கனன் றொசிந்துநோக் குற்றார். |
(இ - ள்.) அப்பெதும்பை மகளிர், "அந்தோ குடையும் சாமரையும் உயர்ந்த நெடிய கொடியும் ஆலவட்டமுமாகிய இவற்றை வரிசை வரிசையாக எடுத்துள்ள திங்கட்டேவனும் திருமாலும் முதலிய தேவர்கள் தமது மாட்சிமையுடைய அழகினைப் பிறர்க்குணர்த்தும் பொருட்டு ஒப்பற்ற பேரழகுடைய குமரப்பெருமானின் மாண்புடைய திருமேனியை மறையா நின்றனரே ; அவர்வாழ்க என்று நெஞ்சு கனன்று வளைந்து வளைந்து நோக்கலாயினர். (வி - ம்.) தனி வனப்பு - ஒப்பற்ற பேரழகு. வாழி என்றது - குறிப்புமொழி என்றவாறு. (220) | | திங்க ளுங்குளிர் முத்தமுஞ் சிறிதுளம் வெதுப்பும் | | | அங்க ணண்ணலார்த் தணப்புறி னண்ணுறின் வதனப் | | | பங்க யங்களும் பரேரெறுழ்த் தோள்களும் பலவும் | | | கொங்கு தங்கிய தொங்கலுங் குளிர்ப்பன வென்றார். |
(இ - ள்.) அம் மகளிர், "அழகிய திருக்கண்களையுடைய எம் பெருமானைப் பாராமற் சிறிது விலகின் திங்கள் மண்டிலமும் முத்து மாலையும் எம்முள்ளத்தைச் சுடாநிற்கும், காணும்பொழுது அப்பெருமானுடைய தாமரை மலர்போன்ற திருமுகங்களும் பருத்த அழகிய வலிமையுடைய திருத்தோள்களும் பிறவுறுப்புக்கள் பலவும் மணந்தங்கிய மாலைகளும் எம் நெஞ்சத்தே குளிர்ப்புண்டாக்காநின்றன என்று வியந்தனர். (வி - ம்.) சிறிது தணப்புறின் என ஒட்டுக. பரேரெறுழ் - பருமையும் அழகும் வலிமையுமுடைய என்க. (221) | | மாழை வாண்முக நோக்கினார் மாதவ ராகப் | | | பீழை வாட்டிய பெருந்தகு தெய்வம்வே றுளதோ |
|