| | ஆழி சூழுல கத்தென வடிமைபூண் டுவக்கும் | | | வீழி வாய்க்கவின் மங்கையர் விறந்தனர் மாடம். |
(இ - ள்.) எம்பெருமானைக் கண்டதுணையானே மெய்யறிவு வந்துற்றமையாலே அவன்பால் அன்பு கொண்டு மெய்யடிமை பூண்டு மகிழாநின்ற வீழிக்கனிபோன்று சிவந்த வாயையுடைய சில மகளிர் மேனிலைமாடத் தேறி நெருங்கிநின்று கடல்சூழ்ந்த இவ்வுலகிலே தன்னுடைய அழகிய ஒளியையுடைய திருமுகத்தை நோக்கிய துணையானே நோக்கியவர் பெரிய தவச் செல்வராம்படி அவருடைய உயிர்க் குற்றங்களை மெலிவிக்கும் பெருந் தகுதியுடைய தெய்வம் இம் முருகப் பெருமானையன்றி வேறொன்றுமுளதோ ? என்று கூறி, (வி - ம்.) இம்மகளிர் தம் பரிபக்குவத்தானே பெருமானைப் பார்த்த அளவிலே ஞெரேலென மெய்யுணர்ச்சி பெற்றவர் என்பது கருத்து. விறப்பு - நெருக்கம். (222) | | தங்கள் வாண்முகச் சந்திர னெதிர்குவிந் தெனக்கைப் | | | பங்க யங்களைக் கூப்பினர் பண்ணவர் பெருமான் | | | துங்க வாண்முகப் பரிதிகண் டலர்ந்தெனத்தொழுத | | | அங்கை மாமலர் விரித்திரந் தாரரு வரங்கள். |
(இ - ள்.) அத்தகைய மாதர் தங்களுடைய முகமாகிய ஒளியையுடைய திங்கள் மண்டிலத்திற்கு முன்னர் தமது கையாகிய தாமரை மலர்கள் கூம்பினவென்னும்படி கைகளைக் குவித்துப் பின் தேவதேவனாகிய முருகப்பெருமானுடைய தூய ஒளியுடைய முகமாகிய ஞாயிற்று மண்டிலத்தைக் கண்டு அத்தாமரைகள் மலர்ந்தன என்னும்படி கைகளை விரித்து நின்று அரிய வரங்களை வேண்டா நின்றனர். (வி - ம்.) பண்ணவர் - தேவர். துங்கம் - தூய்மை. பரிதி - ஞாயிறு. அருவரம் என்றது - திருவடிக்கன்பு செய்ய வேண்டுதல் போல்வன. (223) | | சேந்த பங்கயந் திருமுக மென்றனர் சிலைவேள் | | | ஏந்து பங்கய மெய்தன னிணர்த்தமாந் தளிரோ | | | காந்த சோகத்துத் தளிர்கொலோ கவினுரு வென்றார் | | | ஆய்ந்து மாரனு மக்கணை யிரண்டுபின் றொடுத்தான். |
(இ - ள்.) எம்பெருமானுடைய திருமுகங்கள் செந்தாமரை மலர்களே என்று வியந்தனர். இவருடைய பத்திப் பண்பினை ஆராய்ந்துணர்ந்த காமவேள் அந்நிலையினை மாற்றக் கருதி, அப்பொழுது தன் கையிலேந்திய தாமரை மலரம்புகளை அவர்மேலெய்தனன். அம்மகளிர் பின்னரும் ஆ! ஆ!ழு எம்பெருமான் அழகிய திருமேனி புதிதாகத் தோன்றிய மாந்தளிர்க் கொத்தோ ? என்றும், ஒளிர்கின்ற அசோகந்தளிரோ ? என்றும் கூறி வியந்தனர் ; அதுகண்ட அக் காமன் பின்னும் அம் மாமலரும் அசோக மலருமாகிய இரண்டு கணைகளை அவர்மிசை எய்தனன். |